விடுதலைப் பார்ட் 2 முக்கிய அப்டேட்: வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது, மேலும் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் தற்போது ரசிகர்கள் விடுதலை இரண்டாம் பாகத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் 2ம் பாகத்தை வெளியிட முன்னதாக படக்குழு திட்டமிட்டு இருந்தது. இப்போது, ​​'விடுதலை பார்ட் 2' வெளியீடு தள்ளி போகலாம் என்று சமீபத்திய செய்திகள் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் வெற்றி மாறன் 'விடுதலை 2' படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் மீதமுள்ள பகுதிகளை பிரமாண்டமாக படமாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர், அத்துடன் படத்தின் சிஜி பகுதிகளுக்கும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, முதலில் செப்டம்பரில் வெளியிடத் திட்டமிட்டிருந்த 'விடுதலைப் பார்ட் 2' அந்த தேதியில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதன் தொடர்ச்சி டிசம்பர் 2023 அல்லது அதற்கு முந்தைய தேதி 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த தாமதம் விடுதலை இரண்டாம் பாகத்தை பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களை ஏமாற்றக்கூடும்.


மேலும் படிக்க | காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ஜோதி! பரபர திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்


இதனிடையே 'விடுதலை-1' படம் வெளியான முதல் மூன்றே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.14 கோடியும், உலகளவில் ரூ.23 கோடியும் வசூல் சாதனை புரிந்ததாக கூறப்பட்டது. மேலும், படத்தின் இரண்டாம் பாகம் ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.


இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் 20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்க்காக சூரியும் விஜய் சேதுபதியும் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதிக்காண கதையாக மட்டுமே அமையப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த தகவல் வெளியான முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


இதனிடையே தற்போது மற்றொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.



முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் மஞ்சு வாரியர் அசுரன் திரைப்படத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 15 நொடிகளில் எப்படி காலியாகும்... கண்ணீர்விடும் ரஜினி ரசிகர்கள் - ஏமாற்று வேலையா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ