15 நொடிகளில் எப்படி காலியாகும்... கண்ணீர்விடும் ரஜினி ரசிகர்கள் - ஏமாற்று வேலையா?!

Jailer Audio Launch: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இணையத்தில் 1000 இலவச பாஸ்கள் 15 நொடிகளில் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 24, 2023, 02:16 PM IST
  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நடக்கிறது.
  • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கிறது.
  • பார்வையாளர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
15 நொடிகளில் எப்படி காலியாகும்... கண்ணீர்விடும் ரஜினி ரசிகர்கள் - ஏமாற்று வேலையா?! title=

Jailer Audio Launch: ரஜினி நடிப்பில் வரும் ஆக. 10ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நேரடியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிகழ்வில் ரஜினி உள்பட படத்தின் நடித்துள்ள நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு ரஜினியின் மேடை பேச்சுக்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இசை வெளியீட்டு விழாவை பட ரிலீஸ்க்கு முன்பே, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் என்றாலும், நிகழ்வை நேரில் பார்க்கவும் அதிகமானோர் ஆவலுடன் இருந்தனர். 

இருப்பினும், நிகழ்வன்று ரசிகர்களுக்கு எப்படி அனுமதியளிக்கப்படும் என சந்தேகம் எழுந்தது. அந்த வேளையில், இந்நிகழ்வையொட்டி ஆயிரம் இலவச பாஸ்களை வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று ட்விட்டரில் அறிவித்தது. அதாவது, 500 நபர்களுக்கு இந்த பாஸ், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் இணையத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படும். ஒரு நபருக்கு 2 பாஸ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான இணையதளத்தையும் கூறிப்பிட்டு, அதில் எப்படி பாஸ்களுக்கு விண்ணப்பிப்பது என்றும் ட்விட்டரிலேயே விளக்கம் அளித்திருந்தனர். 

மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் தோனி! அதுவும் இந்த படத்திலா?

இந்நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு இணையதளம் பாஸ்களை பெறுவதற்கு திறக்கப்பட்டது. இருப்பினும், சில நொடிகளிலேயே பாஸ்கள் முழுவதுமாக பெறப்பட்டதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டது.  இதனால், ரஜினி ரசிகர்கள் பெரும்பாலானோர் அதிருப்தி அடைந்தனர். பல பேருக்கு இந்த பாஸ் கிடைக்கவில்லை. இதனை இணையத்தில் பதிவிட்டு தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வந்தனர். 

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ட்வீட்டில்,"இவன் ட்ரெண்ட மாத்தி வெப்பான்! அலப்பறைய கெளப்பிட்டீங்க... அனைத்து பாஸ்களும் வெறும் 15 வினாடிகளில் பெறப்பட்டன" என குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், முதலில் வந்த 500 பேருக்கு இந்த பாஸ்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. 

பாஸ்களை பெற்றவர்களுக்கு, அதை எங்கு, எப்படி பெறுவது என்பது குறித்து எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை பலரும் இணையத்தில் பதிவிட்டு ரஜினியை நேரில் பார்க்கும் ஆவல் குறித்து பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் பிரபல வசனமான,"விடுறா... வண்டிய ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு..." என்பதை வைத்து,"விடுறா... வண்டியா நேரு ஸ்டேடியத்திற்கு..." என அதை வைரலாக்கி வருகின்றனர். 

இவர்கள் ஒருபுறம் இருக்க, பாஸ் கிடைக்காத ரசிகர்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். பலராலும் இதனை நம்பவே முடியவில்லை. குறிப்பாக, ஒரு ட்விட்டர் பதிவர்,"தலைவரின் தீவிர ரசிகனான நான், அலாரத்தை வைத்து இசை வெளியீட்டு பாஸுக்கு பல கணனிகள் மூலம் முன்பதிவு செய்ய முயற்சித்தேன், அது எப்படி 10 வினாடிகளில் அனைத்து பெறப்பட்டது? தயவுசெய்து பாஸ் வழங்கவும்" என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சில நடுநிலை பதிவர்கள் இந்த கொண்டாட்டத்தையும், மனக்குமுறைலையும் நகைச்சுவைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | லியோ படத்துடன் மோதும் டாப் 2 ஸ்டார்களின் படங்கள் - அப்போ பாக்ஸ் ஆஃபீஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News