Vettaiyan Fist Single Manasilaayo Song Lyrical Video : டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பான்-இந்திய அளவில் முக்கியமாக இருக்கும் நடிகர்கள் பலர் நடித்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள்:


வேட்டையன் திரைப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். பேட்ட படத்தில் முதன்முதலாக ரஜினி படத்திற்கு இசையமைத்த இவர், பின்பு தர்பார் படத்திலும் அதன் பின்னர் ஜெயிலர் படத்திற்கும் ரஜினிக்காக மாஸாக இசையமைத்தார். இதையடுத்து, வேட்டையன் படத்திலும் கமிட் ஆனார். 



முதல் சிங்கிளான “மனசிலாயோ” பாடல் இன்று வெளியாகும் என அவர் நேற்றே பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி, அப்பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனை, AI தொழில்நுட்பத்தை உபயோகித்து, மலேசியா வாசுதேவனின் வாய்ஸை உபயோகித்திருக்கின்றனர். இதற்கான ஒப்புதலை, நடிகரும் பாடகருமான யுகேந்திரன் வழங்கியிருக்கிறார். 


அடிபொலி அனிருத்! அசந்து போன ஆடியன்ஸ்..


சமீப காலங்களில், அனைத்து மூத்த மற்றும் இளைய இசையமைப்பாளர்களுக்கும் டஃப் கொடுக்கும் இசையமைப்பாளராக இருக்கிறார், அனிருத். இவர் வெளியிடும் பாடல்கள் எந்த மொழியாக இருந்தாலும் ஹிட் அடித்து விடுகின்றன. அந்த வகையில், “மனசிலாயோ” பாடலும் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். காரணம், பாடலின் லிரிக்ஸும், இசையும் ரசிகர்களின் மனதிற்கு பிடித்தது போல இருக்கிறது. அது மட்டுமன்றி, அனிருத் இந்த பாடலில் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடியிருக்கிறார். இதற்கு முன்னர் அவர் பல பாடல்களில் காமியோ ரோலில் வந்தாலும், இதில்தான் முதன்முறையாக ரஜினியுடன் நடனமாடுவதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர். 


மேலும் படிக்க | ‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..


வேட்டையன் படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குநர்:


2021ஆம் ஆண்டு வெளியான ஜெய்பீம் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர், டி.ஜே.ஞானவேல். இவர், அடுத்ததாக ரஜினியுடன் வேட்டையன் படத்தில் கைக்கோர்த்திருக்கிறார். இந்த படத்தில், நடிகர் ரஜினி ஒரு காவல் அதிகாரி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 



வேட்டையன் படத்திற்காக, அதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் டப்பிங் பேசி முடித்து விட்டனர். ரஜினிகாந்த் உள்பட, அனைவரும் டப்பிங்கை முடித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரிலீஸ் எப்போது?


வேட்டையன் படம், இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனுடன் சூர்யாவின் கங்குவா படமும் வெளியாக இருந்தது. ஆனால், அதன் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளி போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


பான் இந்திய நடிகர்கள்:


வேட்டையன் திரைப்படத்தில், ரஜினியுடன் இணைந்து, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ