VICTIM ஆந்தாலஜி எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
Victim Review: பா.ரஞ்சித், சிம்பு தேவன், ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான விக்டிம் ஆந்தாலஜி தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தற்போது கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகிறது. சில படங்கள் மற்றும் வெப் தொடர்கள் நேரடியாக ஓடிடிகாகவே உருவாக்கப்பட்டு வருகிறது. மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் தற்போது வெப் சீரிஸ் மற்றும் ஆந்தாலஜிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சமீபத்தில் ஒன்பது இயக்குனர்களை இணைந்து நவரசா என்ற ஆந்தாலஜி எடுத்திருந்தன.ர் அந்த வகையில் தற்போது பா ரஞ்சித், சிம்புதேவன், ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து விக்டிம் என்ற ஆந்தாலஜியை இயக்கி உள்ளனர். யார் விக்டிம் என்ற கோணத்தில் 4 கதைகளாக இந்த ஆந்தாலஜி உருவாகி உள்ளது. ஓவ்வொரு கதையும் அரை மணி நேரம் உள்ளது. சோனி லிவ் தளத்தில் தற்போது இந்த விக்டிம் ஆந்தாலஜி வெளியாகி உள்ளது.
பா ரஞ்சித்தின் விக்டிம்:
பா ரஞ்சித் இயக்கிய இந்த கதையில் குரு சோமசுந்தரம், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எதிர்பாராத விதமாக நடக்கும் சண்டையில் கலையரசனின் கழுத்து வெட்டு படுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே இந்த ஆந்தாலஜியின் கதை. ஒருவருக்கு அடிபட்டு இருக்கும்போது அடிபட்டவரை காப்பாற்றுவதா அல்லது அடித்தவரை தாக்குவதா என்ற கோணத்தில் இந்த கதை நகர்கிறது. மனிதர்கள் ஆக்ரோஷத்தில் மற்றும் ஜாதி வெறியில் எவ்வாறு முட்டாளாக இருக்கிறார்கள் என்பதை இந்த கதை உணர்த்துகிறது.
மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக தேசிய விருது நடிகை?
ராஜேஷின் விக்டிம்:
காமெடி படங்களுக்கு பெயர் போன ராஜேஷ் முதல் முறையாக திரில்லரில் களமிறங்கியுள்ளார். இந்த ஆந்தாலஜியில் பிரியா பவானி சங்கர் மற்றும் நடராஜன் நடித்துள்ளனர். அலுவலக வேலைக்காக சென்னை வரும் ப்ரியா பவானி சங்கர் ஒரு வில்லாவில் தங்க நேர்கிறது. அந்த விழாவில் மேனேஜராக நடராஜன் உள்ளார். விலாவில் ஏற்கனவே சில கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது ப்ரியா பவானி சங்கருக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே இந்த ஆந்தாலஜியின் கதை. திரில்லர் கதையை தனக்கே உரிய பாணியில் கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எம் ராஜேஷ்.
சிம்பு தேவனின் விக்டிம்:
பேண்டஸி கதைகளை இயக்குவதில் வல்லவரான சிம்பு தேவன் இந்த ஆந்தாலஜியிலும் பேண்டஸியை கையில் எடுத்துள்ளார். லாக் டவுன் வேலை இழக்கும் நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் தம்பி ராமையா, ஒரு முனிவரை பேட்டி எடுத்தால் மட்டுமே தன்னுடைய வேலையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற முயற்சியில் அந்த முனிவரை பேட்டி எடுக்கிறார். அதில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களே இந்த ஆந்தாலஜியின் கதை. இந்த கதையில் ஆர் ஜே விக்னேஷ்காந்தும் நடித்துள்ளார். அரை மணி நேர கதையில் நான்கு கிளைமாக்ஸ்களை வைத்து அசத்தியுள்ளார் சிம்பு தேவன். ஒருவரை ஏமாற்ற நினைத்தால் நாம் தான் கடைசியில் ஏமாறுவோம் என்பதை இக்கதை உணர்த்துகிறது.
வெங்கட் பிரபுவின் விக்டிம்:
ஒரு சாதாரண கதையை தன்னுடைய பாணியில் அசாதாரணமாக கொடுப்பதில் வல்லவர் வெங்கட் பிரபு. அமலாபால் மற்றும் பிரசன்னா நடித்துள்ள இந்த கதையில் அமலா பால் பணத்திற்காக பெற்றோர்களுக்கு தெரியாமல் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறார். சென்னையில் மிகப் பெரிய பிளாட்டில் வாழ்ந்து வரும் இவரை கொள்வதற்கு பிரசன்னாவிற்கு உத்தரவு வருகிறது. அமலாபாலை கொலை செய்ய சொன்னது யார்? அமலாபாலை பிரசன்னா கொலை செய்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே இந்த ஆந்தாலஜியின் கதை. பார்வையாளர்கள் நினைப்பதை இயக்குனர்கள் செய்யாமல் இருந்தாலே அந்த படம் வெற்றி தான், அந்த வகையில் வெங்கட் பிரபு இதில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | வடசென்னை-2 படம் எப்போது? உறுதிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ