கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் இவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் உள்ள அஜித்தின் வீடு:


தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக பிரபலமான நடிகராக இருப்பவர், அஜித்குமார். இவருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீடு இருகிறது. இந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. அஜித்தின் வீடு இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக இருக்கும் அஜித் வீடு மட்டுமன்றி அந்த பகுதியில் இருக்கும்  பல வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுச்சுவர் இடிப்பதற்கு முன்னர், அஜித்தின் வீட்டில் இருந்து நேரடியாக கடற்கறைக்கு செல்ல முடியும் என்றும் இப்போது அப்படி போக முடியாது என்றும் கூறப்படுகிறது. 


ரீ-மாடல் செய்யப்பட்ட அஜித்தின் வீடு:


ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீடு, கடந்த 2017ஆம் ஆண்டு ரீ-மாடல் செய்யப்பட்டது. இந்த பணிகள் நடைப்பெற்ற போது அஜித்தும் அவரது குடும்பத்தினரும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ளது போல, அஜித் வீட்டிலும் அனைத்தையும் ரிமோட் மூலம் ஆப்பரேட் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து அறைகளிலும் பலதரப்பட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வேலைக்காக, அஜித் ஒரு முன்னணி ஹோம் டிசைனரை வேலைக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | அஜித்குமார் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள நாடு எது தெரியுமா..? ஷாலினி பகிர்ந்த தகவல்..!


விடாமுயற்சி:


அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம், ‘துணிவு’. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதையடுத்து அவர் கமிட் ஆன படம்தான், விடாமுயற்சி. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 5 மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 


உடல் மெலிந்த அஜித்குமார்? 


52 வயதாகும் நடிகர் அஜித்குமார், தான் நடித்த படங்களுக்காக முன்னர் உடல் எடையை குறைக்கவோ ஃபிட் ஆக வைத்துக்கொள்ளவோ யாேசித்ததில்லை. ஆனால், அவர் சமீப காலமாக அவர் நடித்து வரும் சில படங்களிலும் வயதான தோற்றத்துடனேயே காணப்படுகிறார். கடைசியாக வெளியான துணிவு படத்திற்காக தனது லுக்கை மாற்றினார். தற்போது வெளியாக உள்ள விடாமுயற்சி படத்திற்காக அஜித் சில எடைகளை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் வெளியானது. அதில், அவர் உடல் எடை குறைந்து காணப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் இருந்து கருத்துகள் எழுந்தன. 


வெளிநாட்டில் உயிரிழந்த கலை இயக்குநர்..! 


விடாமுயற்சி படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியவர், மிலன் ஃபெரனான்டஸ். இவர், இதற்கு முன்னதாகவே பல அஜித் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். நடிகர் அஜித்திற்கு மிகவும் பிடித்த கலை இயக்குநர் இவர் என்றும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைப்பெற்று வருவதை ஒட்டி, இவரும் அந்த நாட்டில் தங்கியிருந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு இவர் உயிரிழந்தார். இவரது இறப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க | ‘விடாமுயற்சி' படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ