சென்னை: டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் (Bear Grylls) தொகுத்து வழங்கும் "மேன் வெர்ஸஸ் வைல்ட்" (Man vs Wild) நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி வரும் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. இந்தநிலையில், இந்தியா டிஸ்கவரி சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர்:
Discovery Channel IN தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதும்! ஒரு வெகுஜன கொண்டாட்டம், சவாலை ஏற்றுக்கொண்டு சேரவும் எனக்கூறியதோடு, ஒரு பாடல் லிங்கை ஷேர் செய்து (Http://discoverychannel.co.in/thalaivaondiscovery).. அதை பதிவிறக்கி, உங்கள் நடன நகர்வுகளை #ThalaivaOnDiscovery என்ற ஹெஷ்டேக் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.


நடிகர் ரஜினி (Rajini) ரசிகர்கள் இந்த #ThalaivaOnDiscovery ஹெஷ்டேக்கை சமூக வலைத்தளமான ட்விட்டரில் டிரேண்டிங் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க: மறக்க முடியாத அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ்-க்கு நன்றி: நடிகர் ரஜினி


பிரதமர் மோடி:
ஏற்கனவே பிரதமர் மோடி, அவருடன் இணைந்து காடுகளில் பயணம் செய்த ஆவணப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. மேன் வெர்ஸஸ் வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.


பார்க்க வீடியோ: பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கட்சி...


பியர் கிரில்ஸ் யார்?
உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சி "மேன் வெர்ஸஸ் வைல்ட்" (Man vs Wild). இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர்.