வீடியோ: பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கட்சி இதோ!

பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2 நாட்கள் வீடியோ கட்சிகள் விரைவில் டிஸ்கவரி சேனலில் வெளியாக உள்ளது.

Last Updated : Feb 19, 2020, 01:24 PM IST
வீடியோ: பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கட்சி இதோ! title=

பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2 நாட்கள் வீடியோ கட்சிகள் விரைவில் டிஸ்கவரி சேனலில் வெளியாக உள்ளது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சி மேன் வெர்ஸஸ் வைல்ட் ('Man vs Wild'). இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர்.

அந்தவகையில் ஏற்கனவே பிரதமர் மோடி, அவருடன் இணைந்து காடுகளில் பயணம் செய்த ஆவணப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. மேன் வெர்ஸஸ் வைல்ட் ('Man vs Wild') நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

 

 

 

Trending News