கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் வெளியான படம், விடுதலை. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில், இதனை உரிய நேரத்தில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடுதலை பாகம் 2:


தமிழ் திரையுலகில் சூரி (Soori) முதன் முதலாக சீரியஸாகவும், ஹீரோவாகவும் நடத்த படம், விடுதலை பாகம் 1. இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேது உள்ளிட்ட பலர் நடத்திருந்தனர். வலுவான கதைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படைக்கும் இயக்குநர் என்று பெயர் பெற்ற வெற்றிமாறனுக்கு, இந்த படம் அந்த பெயரை இன்னும் மென்மேலே தூக்கி விட்டது. இப்படம், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில், இதனை சரியான நேரத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 


என்ன பிரச்சனை? 


விடுதலை பாகம் 2 (Viduthalai Part 2) படத்தின் பெரும்பாலான காட்சிகள், அதன் முதல் நாள் படப்பிடிப்பின் போதே முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படம், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளிகளை, தமிழகத்தின் மலைப்பாங்கான இடங்களில் படமாக்க உள்ளனர். ஆனால், ஒரு சில காரணங்களுக்காக இதில் தாமதம் ஏற்படுவதாகவும் இதனால் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | லியோ படத்தில் மட்டுமல்ல..‘இந்த’ தமிழ் படங்களிலும் பொய்யான Flash Backதான் கதை..!


எப்போதுதான் ரிலீஸ்? 


விடுதலை பாகம் 2 படம் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டடுள்ளதால் உரிய நேரத்தில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முழுவதாக முடிந்த பின்னர், வரும் ஆண்டின் மாரச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்றளவும் வெளியாகவில்லை. 


ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி:


சூரி முதன் முதலாக ஹீரோவாக நடித்திருந்த படம், விடுதலை பாகம் 1 (Viduthalai Part 1). அதுவரை சூரியை காமெடி நடிகராக மட்டுமே பார்த்து வந்த ரசிகர்கள், இந்த படத்தின் மூலம் அவரது சீரசயஸான முகத்தை பார்த்தனர். காமெடியானாக நடித்த போது சூரிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினை விட, ஹீரோவாக நடித்த போது அதிகமாகவே கிடைத்தது. அதிலும், இப்படத்திற்காக அவர் மெனக்கெட்டு உடலை கட்டுமஸ்தாக மாற்றினார். டைலாக் டெலிவரி, நடிப்பு, சண்டை காட்சிகள் என நடிகராக பல்வேறு படிகளை தொட்டார் சூரி. 


விடுதலை பாகம் 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து இன்னும் சில புதிய கதாப்பாத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். மலையாள நடிகை மஞ்சு வாரியரர், இந்த பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ