விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் தற்போதே அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செய்துவருகின்றனர். பீஸ்ட் வெளியீட்டுக்கு அடுத்த நாள் யஷ்ஷின் கேஜிஎஃப்-2 படம் ரிலீசாகவுள்ளது. முன்னணி நடிகர் எனும் காரணத்தால் விஜய்யின் பீஸ்ட்தான் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஒப்பீட்டளவில் பார்த்தால் கேஜிஎஃப்-2 க்கு குறைவான திரையரங்குகள்தான் கிடைத்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவைப் பொறுத்தவரை விஜய்யின் பீஸ்ட் சுமார் 420க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிலீசுக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை 500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எவ்வளவு திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகவுள்ளது எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் சுமார் 800 திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகவுள்ளதாம்.


                                                         


யஷ் நடித்துள்ள கேஜிஎஃப்-2 படம் 250 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது. பீஸ்ட் படம் மட்டும் தனியாக வெளியாகியிருக்கும் பட்சத்தில் ஆயிரத்தும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் எனவும், தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் எனும் சிறப்பையும் பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!


800 திரையரங்குகளில் வெளியானாலும் கொரோனா கட்டுப்பாடு தளர்வு மற்றும் தொடர் கோடை விடுமுறை காரணமாக ரிலீசுக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. பீஸ்ட் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் பான் - இந்தியா ரிலீஸாக வெளியாகும் முதல் விஜய் படம் எனும் பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR