நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகவுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பீஸ்ட் படத்திலிருந்து ஏப்ரல் 2ஆம் தேதி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு வெளியான ட்ரெய்லர் இணையத்தைத் துவம்சம் செய்தது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவரும் பீஸ்ட் ட்ரெய்லர் தற்போது பல புதிய சாதனைகளையும் படைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் பீஸ்ட் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதேபோல 2.2மில்லியன் லைக்குகளையும் அது பெற்றுள்ளது. அந்த வகையில், ஒரு மொழியில் மட்டும் வெளியாகி அதிக பார்வைகளைப் பெற்ற தென்னிந்திய ட்ரெய்லர் எனும் சாதனையை பீஸ்ட் ட்ரெய்லர் பெற்றுள்ளது.


                                                                                  


நடிகர் பிரபாஸின் ராதே ஸ்யாம்  படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 23.2மில்லியன் பார்வைகளைப் பெற்றதே தென்னிந்திய படமொன்றின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இதைத்தான் தற்போது அடித்து நொறுக்கி இருக்கிறது பீஸ்ட். பிரபாஸ் படத்தை மட்டுமல்லாது நடிகர் அஜித்தின் வலிமையிலும் கைவைத்துள்ளது பீஸ்ட். அதாவது, அஜித்தின் வலிமை ட்ரெய்லர் வெளியாகி சுமார் 3 மாதங்கள் ஆகின்றன.


மேலும் படிக்க | 4 கார் இருக்கும்போது சைக்கிள்ல போனது ஏன்?- விஜய் பதில்?!


வலிமை ட்ரெய்லரின் இதுவரையிலான மொத்த பார்வை 23 மில்லியன் மட்டுமே. ஆனால் விஜய்யின் பீஸ்ட் ட்ரெய்லரோ வெளியான ஒரே நாளிலேயே வலிமையின் 3 மாத கால பார்வைகளை விஞ்சியுள்ளது. வலிமை ட்ரெய்லர் சுமார் 95  நாட்களில் பெற்ற பார்வைகளை பீஸ்ட் ட்ரெய்லர் ஒரே நாளில் பெற்றுள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். முந்தைய பல சாதனைகளை உடைத்துள்ள இந்த ட்ரெய்லர் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR