கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்குபவர் சமந்தா. இவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராக திகழும் விஜய் தேவரகொண்டாவும் இரண்டாவது முறையாக குஷி என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த ஜோடி


பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக சமந்தா திகழுவது போல, பல இளைஞசிகளின் ஹார்ட்த்ரோபாக திகழ்கிறார், விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் இதற்கு முன்னரே 2018ஆம் ஆண்டு வெளியான மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இவர்களது கெமிஸ்ட்ரி அப்போதே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நிலையில், இவர்கள் அடுத்ததாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம். குஷி. காமெடி கலந்த காதல் படமாக உருவாகிவரும் இப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம், பழம்பெரும் நடிகை லக்ஷமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் நா ரோஜா நுவே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 


 



BTS வீடியோ


குஷி படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல இயற்கை அழகு நிறைந்த இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இது குறித்த சில பதிவுகளை ஏற்கனவே சமந்தா வெளியிட்டிருந்தார். இவர்கள் படப்பிடிப்பின் போது எடுத்திருந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலானது. இதையடுத்து, இன்று குஷி படத்தின் படபிடிப்பு தளத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தாவை எடுத்த கேன்டிட் வீடியோக்கள் பல அதில் இடம் பெற்றுள்ளன. 


சமந்தாவை கொஞ்சிய விஜய்..


இன்று வெளியாகியுள்ள படப்பிடிப்பு தள வீடியோவில், விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இருக்கும் பல தருணங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வெளியான நா ரோஜா நுவே என்ற பாடலின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் இவை. இதில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இடையேயான அன்பும் நட்பும் அழகாக வெளிபடுவதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளன. 


சில நாட்களிலேயே பல மில்லியன் லைக்ஸ்..


கடந்த 9 ஆம் தேதி வெளியான நா ரோஜா நுவே பாடல், பல ரசிகர்களின் மனங்களை வருடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடல், தற்போது வரை 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பல லட்சம் லைக்ஸ்களையும் வாரிக்குவித்துள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | Samantha: ‘தனிமை புனிதமானது..’ குஷி படப்பிடிப்பின் போது தனிமையில் இனிமை கண்ட சமந்தா!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ