தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.  பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்க இருப்பதாக செய்திகள் பரவலாக வெளிவரத் தொடங்கின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!


இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்து வந்தது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றி இருப்பது போல் ஷாருக்கான் தோற்றமளித்தார், இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக லயன் என்று வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவர தொடங்கியது. தற்போது இது கிட்டத்தட்ட உறுதியான செய்தி என்று கூறப்படுகிறது. சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள ஜவான் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்ள உள்ளார்.  விஜய் சேதுபதி கதாபாத்திரம் ஜவான் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழில் தன் கைவசம் சிறிது படங்கள் மட்டுமே வைத்திருக்கும் விஜய் சேதுபதி பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களின் நடித்து வருகிறார்.  சமீபத்தில் இவர் நடித்து இருந்த விக்ரம் படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது.



மேலும் படிக்க | தளபதி - சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்லியிருக்கும் ஹரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR