இந்தி திணிப்பு Vs இந்தி படிப்பு குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!
Merry Christmas Movie Press Meet Vijay Sethupathi Speech: டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் - ரமேஷ் தாரணி தயாரித்து இயக்குநர் ஸ்ரீ ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ்.
டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் - ரமேஷ் தாரணி தயாரித்து இயக்குநர் ஸ்ரீ ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சஞ்சய் கபூர், சண்முகராஜன் , நடிகைகள் கத்ரினா கைஃப், தீபா வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இது நடந்தது ஆச்சரியமாக இருந்தது. நம் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் நம்மை கேட்காமல் வந்து விடும். இயக்குநர் ஸ்ரீ ராம், 96 படம் பார்த்து விட்டு என்னிடம் கூப்பிட்டு பேசினார். ஐநாக்ஸ் தியேட்டரில் பத்னாபூர் படம் பார்த்தேன் ரொம்ப பிடித்திருந்தது. இவருடன் ( இயக்குநர் ஸ்ரீ ராம்) வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. மெரி கிறிஸ்துமஸ் படம் பண்ணலாம் என்று கதை சொன்னார். ஜனவரி 16 என் பிறந்த நாளில் அக்ரிமென்ட் போடலாமே என்று சொன்னதாக அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு பேசினார்.
"கத்ரினா கைஃபை பார்த்தது சந்தோஷமாக, பெரிய கம்போர்ட்டாக இருந்தது எனவும், இந்த படம் நல்லா வந்திருக்கிறது என்றும், ஹிந்தி பேசும் போது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, இந்தி பேசும் போது எனக்கும் இதே மாதிரி தான் இருந்தது. நான் துபாயில் இருக்கும் போதே, அங்கு ஹிந்தி பேசுவோம். நான் ஹிந்தி பேசியே 17 வருடம் ஆகி விட்டது. இன்னும் ஹிந்தி கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கிறது என்றும், துபாயில் வேலை பார்த்தது தான் ஹிந்தி ஓரளவுக்கு பேச முடிந்தது" என்று கூறினார்.
மேலும் படிக்க | Joe OTT Release: ‘ஜோ’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
மேலும், “அந்த மொழியை பேசும் இடத்தில் தான் கண்டுபிடித்து பேசும் போது தான் சில இடங்களில் கஷ்டமாக இருந்தது எனவும் , கத்ரினா கூட நடித்ததே பெரிய ஆச்சரியம் தான். எங்களை ஜோடியாக எப்படி கற்பனை பண்ணாங்கன்னு கூட தெரியல. இப்போது ஹிந்தி சினிமா தமிழ் நடிகர்களை எப்படி பார்க்கிறீர்கள். நான் ஹிந்தியில் 5 படம் பண்ணி விட்டேன். ரொம்ப கம்போர்டபிலாக இருந்தது. நிறைய படங்கள் எல்லா மொழியிலும் வருகிறது. கத்தினா, ராதிகா இரண்டு பேரும் நல்ல திறமைசாலிகள்” என்றார்.
ஹிந்தி குறித்த கேள்விக்கு, இந்த மாதிரி கேள்வி அமீர்கானிடமும் கேட்டீர்கள். ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள். என்னைப் போன்றவர்களிடம் கேட்டு என்னவாக போகிறது என்றும், இங்கு இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு யாரும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படிக்கிறவர்களும் இருக்கிறார்கள் எனவும், அதற்கான விளக்கத்தை அமைச்சர் பி.டிஆர் தெளிவாக சொல்லி இருக்கிறார் என்றும் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை கத்ரீனா கைஃப்,
“சென்னை எனக்கு இரண்டாவது வீடு மாதிரி. எனது முதல் தமிழ் படம் மெரி கிறிஸ்துமஸ். நான் தெலுங்கு, மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் படப்பிடிப்பு முடிந்த பிறகு தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன் என்றும், ரொம்ப கஷ்டமாக இருந்தது” என்று தமிழில் பேசினார். இந்த படம் எதிர்பாராத விதமாக அமைந்ததாகவும் தான் 96 போன்ற விஜய் சேதுபதி படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய நடித்தது ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது எனவும் கூறினார்.
மேலும் படிக்க | சிறு வயதில் செம க்யூட்டாக இருக்கும் ‘இந்த’ திரை பிரபலம் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ