ஒரு பிரபலம், தனது சிறுவயது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தையும், அந்த பிரபலம் யார் என்பதையும் இங்கு பார்க்கலாம்.
பிரபல நடிகர், தனது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அந்த பிரபலம், வேறு யாரும் இல்லை. நடிகர் சாந்தனுதான். நடிகர் பாக்கியராஜின் மகனான இவர், 2008ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தார்.
சாந்தனு, முதன் முதலாக 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சுக்கட்டு எனும் படத்தில் சிறு குழந்தையாக நடித்தார்.
சாந்தனு, தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்தார். இவருக்கும், கிகி விஜய் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் 2015ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
சாந்தனு, கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலையும் இவர் வைத்துள்ளார்.
சாந்தனுவின் தந்தையும், நடிகருமான பாக்கியராஜ்ஜிற்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவித்து சாந்தனு பதிவிட்டுள்ளார்.
சாந்தனுவின் இந்த சிறுவயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.