நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள 'ஜவான்' திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை பாகம் 2' படத்தில் நடித்து வருகிறார். விடுதலை படத்திற்கு பிறகு வெற்றிமாறனுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார், ஆனால் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லை, பொன்ராம் இயக்குகிறார்.  படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வெற்றிமாறன் எழுத்தவுள்ளார், இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.  விஜய் சேதுபதி ஏற்கனவே இயக்குனர் பொன்ராமுடன் இணைந்து நடித்த 'டிஎஸ்பி' படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. இதற்கிடையில், 'விடுதலை' படத்தில், புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைவர் வாத்தியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IMDB TOP 10 MOVIES: சொதப்பிய பாலிவுட் படங்கள்! அசத்திய தென்னிந்திய படங்கள்!


விஜய் சேதுபதி, சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர், மேலும் விஜய் சேதுபதி ஒரு தலைவராக செய்யும் எழுச்சியையும் தியாகத்தையும் படம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் 'மகாராஜா', 'காந்தி டாக்ஸ்' மற்றும் 'மெர்ரி கிறிஸ்மஸ்' படங்கள் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவை இயக்குனர் நித்திலன் இயக்கி வருகிறார். போஸ்டரில் விஜய் சேதுபதி ரத்தத்தில் நனைந்த சட்டை மற்றும் பேன்ட் அணிந்து, கையில் அரிவாளுடன் காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவரது இடது காதுகளும் வெட்டப்பட்டதாக தெரிகிறது.



மஹாராஜா படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, “உங்கள் பாராட்டுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி. 50 படங்கள் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு மைல்கல் போன்றது. எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்பது நம்பிக்கையை அளிக்கிறது. மேலும், இது அனுபவத்தை சேர்க்கிறது. இதில் பொறுமையும் ஞானமும் அடங்கும். எனக்கு நல்ல அனுபவத்தை தந்த அனைத்து இயக்குனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் மகான் அல்ல படத்தின் டப்பிங் முடிந்ததும், அருள்தாஸ் அண்ணனும் நானும் ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். திடீரென்று ஒரு நாள் இரண்டு மிஸ்டு கால்கள் வந்தன. திரும்ப அழைக்கும் போது நண்பர் சீனு ராமசாமி ஒரு புதிய படத்தை இயக்குகிறார் என்று சொன்னார். அப்போதெல்லாம் அவருக்கும் எனக்கும் பெரிய உறவுகூட இல்லை. அதுக்குப் பிறகு சீனு ராமசாமி சார் போய்ப் பார்த்தேன். இப்போது இந்த நிலைக்கு வந்துவிட்டேன். நான் இங்கு இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. மிக்க நன்றி அருள்தாஸ், நன்றி சீனு சார், இந்த தருணத்திற்கு நன்றி,” என்று அவர் கூறினார்.


மகாராஜா பற்றி பேசுகையில், "நட்டி சார், அருள்தாஸ் அண்ணே, சிங்கம்புலி அண்ணே எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. அபிராமி, மம்தா ரெண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்க. விருமாண்டியில இருந்து அபிராமி மேடத்தோட ரசிகன் நான்... மஹாராஜா நல்ல பேசுற படமா இருக்கும். வணிக ரீதியிலும் நன்றாக இருக்கிறது. படத்தை எழுதும்போதே தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு லாபம் தரும் படமாக நித்திலன் எழுதியிருந்தார். அனுராக் காஷ்யப் இயக்குனராக மட்டுமின்றி நல்ல நடிகரும் கூட" என்று கூறினார்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ