மாணவர்கள் மத்தியில் தனுஷின் அசுரன் பட வசனத்தை பேசிய விஜய்!
10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கதொகை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்க விஜய் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. நேற்று விஜய் தனது மன்ற நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சி தொடர்பாக எந்த வித பேனர், கட் அவுட்டுகளும் வைக்க கூடாது என்று அறிவுரை வழங்கி இருந்தார். காலை முதலே மாணவர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
மேலும் படிக்க | Leo First Single: நான் ரெடி பாடலை பாடியது யார் தெரியுமா?
அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் ஓட்டு அவருக்கு தான் என சில மாணவர்கள் பேட்டி அளித்தனர். மேலும் எம்ஜிஆர் இடத்தை விஜய் தான் நிரப்புவார் என்று பெற்றோர் கூறினர். 12 வகை காய்கறி கூட்டு, அப்பளம், வடை, பாயாசம், ரசகுல்லா என தடபுடல் சைவ விருந்து மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது. ரசிகர்கள் விஜய்யின் காரை சூழந்ததால் வீட்டில் இருந்து கிளம்பியநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர தாமதம் ஏற்பட்டது. விஜய் வரும்பொழுது ஏராளமான ரசிகர்கள் ஒன்று சேர்ந்ததால் அதிக கூட்டம் நெரிசல் ஏற்பட்டு நிகழ்ச்சி நடக்கும் இடம் கவரமானது. நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ரசிகர்கள் முண்டியடித்து செல்ல முயன்றனர், அப்போது பாதுகாப்பில் இருந்த பவுன்சர்கள் விஜயின் ரசிகர்களை தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி விஜயை பார்க்க வந்த ரசிகர்கள் நிகழ்ச்சி நடக்கும் பிரம்மாண்ட அறைக்கு செல்ல முயற்சி செய்ததால் பாதுகாவலர்கள் அவர்களை தள்ளி விட்டு ஒரு சில ரசிகர்களை தாக்கினர். மேலும் விஜய் வரும் போது ரசிகர் ஒருவர் அவரின் கார்க்க்கு கீழ் திடீரென படுத்து கொண்டார், அவரை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், " என் மனசுல ஏதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி உணர்கிறேன். நம்ம விரலை வைத்து நம்ம கண்ணையே குத்துராங்க அதான் இப்போ நடந்துட்டு இருக்கு. காசு வாங்கிட்டு ஒட்டு போடாதீங்க. வெற்றி அடைந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்கள். Discourge பண்றவங்களை கண்டுக்காதீங்கா, நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிறுவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிறுவானுக, ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே, முடியாது.. இந்த வரிகள் என்னை மிக பெரிய அளவில் பாதித்தது அதனால்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒரு தொகுதியில் 15கோடி செலவு செய்தால் அதற்கு முன்பு எவ்ளோ சம்பாதித்து இருப்பார்கள்? பணம் கொடுப்பவர்கள் தோல்வியடைந்தால், அது நீங்கள் கொடுக்கும் பரிசு. அம்பேத்கர், பெரியார், காமராஜரைத் தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் தான் நாளை வாக்காளர்கள்" என்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விஜய் அறிவுரை வழங்கினார்.
12 ஆம் வகுப்பு போது தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக 600 க்கு 600 பெற்ற மாணவி நந்தினி மற்றும் அவரது பெற்றோருக்கு விஜய் விருது வழங்கினார், மேலும் நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கினார் விஜய். கோவை கினத்துகடவு மாணவி ஆர்த்தி 600 க்கு 547 மதிப்பெண் பெற்றார். அவர் ஒரு மாற்று திறனாளி மாணவி என்பதால் நடிகர் விஜய் மேடையில் இருந்து இறங்கி வந்து அவர் உட்காந்து இருக்கும் இடத்தில் பரிசை வழங்கினார்.
மேலும் படிக்க | நீங்க இப்படி செய்யலாமா? விஜய்யின் லியோ போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ