நீங்க இப்படி செய்யலாமா? விஜய்யின் லியோ போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

லியோ திரைப்படத்தின் போஸ்டரில் புகைப் பிடிப்பதுபோல் விஜய் இருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2023, 10:00 AM IST
  • வெளியானது லியோ போஸ்டர்
  • புகைப்பிடிக்கிறார் நடிகர் விஜய்
  • அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு
நீங்க இப்படி செய்யலாமா? விஜய்யின் லியோ போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு title=

தமிழ் திரையுலகின் உட்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு இருவருவரின் கூட்டணியில் உருவாகும் படம். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.  விஜய் பிறந்தநாள் விரைவில் வர இருப்பதால், இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களும் லியோ அப்டேட் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப லியோ படக்குழு 'நா ரெடி' என்ற பாடல் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி... காவலில் எடுக்க உத்தரவு - நீதிபதி அதிரடி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் இந்த போஸ்டரை தங்களின் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடன் கெத்தாக போஸ் கொடுக்கிறார். அதேபோல்,   வாயில் புகையும் சிகரெட்டையும் வைத்துள்ளார். போஸ்டர் வெளியானவுடன் சோஷியல் மீடியாவில் விஜய்யின் இந்த லியோ போஸ்டர் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்தது. அதேநேரத்தில் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. முதல் குரலாக அரசியல் வட்டாரத்தில் இருந்து எழுந்துள்ளது. 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜய்யின் லியோ போஸ்டருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இளைஞர்களை அதிகம் ரசிகர்களாக கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் போஸ்டர் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், “நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவருக்கு  புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News