The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர்களின் முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு GOAT - The Greatest Of All The Time (GOAT) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கிய GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்னாப்ரிக்கா, ஹைதராபாத், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.


மேலும் படிக்க | Good Bad Ugly படத்திலும் இவர்தான் கதாநாயகி! அஜித்துக்கு ரொம்ப ராசியானவர் ஆச்சே..


இதனிடையே கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். தற்போது இதை டார்கெட்டாக வைத்து படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் துவங்கிய நிலையில் படத்தின் சூட்டிங் நடக்கும் லொகேஷன்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்திருந்தார்.



தொடர்ந்து சிறு சிறு அப்டேட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படம் தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் கோமியோ ரோலில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக மறந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் காட்சி அளிக்கயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் இந்த படத்தில் பாடல் ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.



மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ