வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது, தற்போது படக்குழு விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றது. சமீபத்தில் படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் விமானம் ஏற வரிசையில் நின்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. அதற்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி அதுவும் இணையத்தில் பயங்கர ட்ரெண்டானது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மருத்துவமனையில் நடிகர் விஜய், பிரபு ஆகியோர் நடித்த காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இவ்வாறு தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருவதால் கடுப்பான வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி, படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என்று இயக்குனர் வம்சி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் வீடியோ வெளியாவதை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | VICTIM ஆந்தாலஜி எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வாரிசு. இந்த படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆஃப் டிசைனராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் ஷியாம், சங்கீதா, சம்யுக்தா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். விஜய்யுடன், இசையமைப்பாளர் தமன் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படமாகும்.



இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் மாதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. அத்துடன் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக தேசிய விருது நடிகை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ