நாளை தமிழகத்தின் முடி சூடா மன்னன் என தலைமைச் செயலகத்தின் படம் ஆளுயர மாலை சூடி உள்ள நடிகர் விஜயின் புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் வாரிசு திரைப்படத்தை வரவேற்று விஜய் மக்கள் இயக்கத்தினர் நிலையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வரும் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படங்களின் ரிலீசை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை போல, வாரிசு பாடல் விளியீட்டு நிகழ்விலும் நடிகர் விஜய் பல்வேறு சூசகமான அரசியல் வசனங்கள் பேசியது ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் வரக்கூடிய 11ஆம் தேதி வெளியாகும் வாரிசு திரைப்படத்திலும் சூசகமான பல்வேறு அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன



மேலும் படிக்க | விஜய் மீது செம கடுப்பில் தெலுங்கு ஹீரோக்கள்! தேவையில்லாமல் சிக்க வைக்கும் தில் ராஜூ! 


மேலும் நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு ரசிகர்கள் சந்திப்பு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 11ம் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தை வரவேற்று நாங்குநேரி ஒன்றிய தலைமை இளைஞர் அணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



அவற்றில் 'தளபதி அவர்களின் வாரிசு மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா காண வாழ்த்துகிறோம்' எனவும் 'இன்று திரையுலகில் எங்கள் அண்ணன், நாளை தமிழகத்தின் முடிசூடா மன்னன்' என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த போஸ்டர்களில் வெற்றி மாலை சூடியது போன்ற விஜயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதுடன் போஸ்டரில் பின்னூட்ட படமாக தலைமைச் செயலகமும் வைக்கப்பட்டுள்ளது. 



அரசியல் களத்திற்கு நடிகர் விஜய் வரவேண்டும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் தெரிவித்து ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் தலைமைச் செயலகம் வடிவமைப்பிலும் முதலமைச்சர் என்ற வாசகங்கள் இடம் பெற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்த போஸ்டர்கள் குறைந்து வந்துள்ள நிலையில் மீண்டும் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அசுர வேகம் எடுத்துள்ளன.


மேலும் படிக்க | Thunivu vs Varisu: துணிவுக்கு பின் வந்த வாரிசு அப்டேட்... இந்த பொங்கல் யாருக்கு ? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ