விஜய் மீது செம கடுப்பில் தெலுங்கு ஹீரோக்கள்! தேவையில்லாமல் சிக்க வைக்கும் தில் ராஜூ!

Varisu in Telugu: தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை வாரிசு படம் அப்செட் செய்துள்ளது. அதோடு அவர்கள் விஜய்யை எதிர்க்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 7, 2023, 12:21 PM IST
  • வாருசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
  • விஜய்க்கு தெலுங்கு ரசிகர்களும் அதிகம் என்பதால் வசூலை அள்ளிவிட நினைக்கிறார் தில் ராஜூ.
  • சொந்த தெலுங்கு சினிமாத்துறையை உதாசினப்பட்டுத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டு.
விஜய் மீது செம கடுப்பில் தெலுங்கு ஹீரோக்கள்! தேவையில்லாமல் சிக்க வைக்கும் தில் ராஜூ!  title=

வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். அதேபோல படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். தமிழில் தெலுங்கு இயக்குநர்கள் பலர் படங்களை இயக்க தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை வாரிசு படம் அப்செட் செய்துள்ளது. அதோடு அவர்கள் விஜய்யை எதிர்க்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

தெலுங்கு திரையுலகை பொறுத்த வரை முக்கியமாக 3 குடும்பங்கள் தான் அங்கே பவரில் இருக்கின்றன. அவர்களுக்கு தான் ரசிகர்களும் அதிகம். அதில் என்டிஆர் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், நாகார்ஜூனா குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பொங்கல், தீபாவளி என எந்த பண்டிகையாக இருந்தாலும், இவர்கள் படங்கள் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகும். சில சமயங்களில் இவர்களுக்குள்ளும் மோதல் ஏற்படும். ஆனால் இந்த முறை இவர்கள் ஒன்றிணைந்து விஜய்க்கு எதிராக மறைமுகமாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

வாரிசு படத்தை பொங்கலுக்கு தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டியும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யாவும் சங்கராந்தி ஸ்பெஷலாக தெலுங்கில் வெளியாகின்றன. தில் ராஜூ தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பதால், அவர் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் வெளியாகும் காட்சிகளை விட வாரிசு படத்தின் தெலுங்கு டப் காட்சிகளை அதிக திரையரங்குகளில் வெளியாகும் வகையில் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

வாருசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. விஜய்க்கு தெலுங்கு ரசிகர்களும் அதிகம் என்பதால் வசூலை அள்ளிவிட நினைக்கும் தில் ராஜூ சொந்த தெலுங்கு சினிமாத்துறையை உதாசினப்பட்டுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | பயம் இல்லாமல் பால் அபிஷேகம்... துணிவு படத்தை துணிவுடன் கொண்டாடும் அஜித் ரசிகர்கள் 

இதனால் விஜய் மீதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பண்டிகை நாட்களில் சொந்த மொழிப்படங்கள் வெளியாகி கலெக்‌ஷன் அள்ளும். ஆனால் இப்படி மற்ற மொழிகளில் எடுக்கப்படும் படங்களை டப் செய்து வெளியிட்டால் அதனால் சொந்த மொழிப் படங்கள் கலெக்‌ஷன் பாதிக்கும் என்று பலரும் நேரடியாகவே அங்கு பேசி வருகின்றனர். 

வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய படங்களுக்கு கிடைத்த திரையரங்குகளை விட இரு மடங்கு திரையரங்குகள் வாரசுடுவுக்கு கிடைத்துள்ளதாம். தமிழில் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் வாரிசு, தெலுங்கில் என்று ரிலீஸ் ஆகும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. துணிவும் தெலுங்கில் மிகக்குறைந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் இந்த தெலுங்கு சினிமா எண்ட்ரி அங்கிருக்கும் சூப்பர் ஸ்டார்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மற்ற மொழிப்படங்கள் வெளியாவதை ஆதரிக்கிறோம், ஆனால் எங்கள் படங்களை விட அவர்கள் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை கடுகளவும் ஆதரிக்க முடியாது என பல நடிகர்களும் தில் ராஜூவுக்கு செய்தி அனுப்பி வருகிறார்களாம். இந்த சிக்கலில் விஜய்க்கு தான் தலைவலி என்றும் கூறப்படுகிறது. 

சில நாட்களுக்கு முன்பு விஜய் தான் தமிழில் நம்பர் 1 நடிகர் என பேசி சர்ச்சையை கிளப்பினார் தில் ராஜூ. அதன்பின்னர் இப்போது ஜனவரி 11-ம் தேதி முதல் நாள் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கே வாரிசு தான் வெளியாக வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். அந்த 1 மணி காட்சியின் கலெக்‌ஷன் என்பது மிகவும் முக்கியம் என்பதால் எப்போது எந்த படம் வெளியாகும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் செம ஹிட் ஆனது. அதனால் துணிவும், வாரிசும் ஹிட் ஆகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தில் ராஜூ தேவையில்லாமல் பல சிக்கல்களை விஜய்க்கும், ரசிகர்களுக்கும் சேர்த்து ஏற்படுத்தி வருவதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். என்ன தான் நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் புதிய சிக்கல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News