தள்ளிபோகிறதா விஜய்யின் படம்?
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66-வது படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | Spiderman No Way Home முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! அதிரடி கலெக்ஷன்
அதனையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராக இருக்கிறது. இப்படம் ஒரு நோய் பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 'ஏரோட்டோமேனியா' எனும் நோய் தனக்கு சம்மந்தம் இல்லாத ஒரு நபர் தன்னை நேசிப்பது போன்ற ஒரு கற்பனை உணர்வை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிக்கப்பட்டவராக விஜய் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படக்குழு மூன்று மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குறிப்பிட்ட இடைவெளியில் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் வெளிநாடு பயணம் மேற்கொள்ள தயாராகிறார் என்று தகவலைகள் வெளியாகி இருக்கிறது.
ALSO READ | ஹீரோ பில்டப்பில் கதையை கோட்டை விட்ட புஸ்பா! படம் எப்படி இருக்கு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR