மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 



'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம் படத்தில் கமலுக்கென்று ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஏற்கனவே கமல் நடிப்பில் வந்த விக்ரம் பட கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதனை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்துவ்ம் விதமாகவோ இருக்கும் என கூறப்படுகிறது.


 



இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


மேலும் படிக்க | தளபதி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்


அதனை லோகேஷ் கனகராஜும் ரீ ட்வீட் செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு கமல் ஹாசனின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ‘வெயிட் லாஸ்’ புகைப்படம்! - உள்ளே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR