இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பு 110 நாட்களுக்கு பிறகு நிறைவடைந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த மாத இறுதியில் முடிவடைந்த நிலையில், முழு படப்பிடிப்பும் நேற்று நிறைவடைந்தது.  கடந்த ஆகஸ்ட் 2020 அன்று தொடங்கிய விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பாதியில் நின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பிக்பாஸ் கமல் விலகல் : உண்மை காரணம் என்ன?


பின்பு நிலைமை சரியானதும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில் விக்ரம் படத்தை விரைந்து முடிப்பதற்காக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.  தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது. 


 



நீண்ட நாட்களாக அதிக எதிர்பார்ப்பில் இருந்த அஜித்தின் வலிமை படம் சமீபத்தில் வெளியானது.  சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் இந்த மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது.  விஜய்யின் பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. முன்னதாக விக்ரம் படமும் சம்மரில் நான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எப்போது வெளியாகும் என்கிற தேதி குறித்த அறிவிப்பு கிடைத்துள்ளது.  


விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் விக்ரம் படம் ரிலீசாகும் தேதி மார்ச் 14-ம் அன்று காலை 7 மணிக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.


 



மேலும் படிக்க | விக்ரம் படம் தொடர்பாக வீடியோவுடன் சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR