பிக்பாஸ் கமல் விலகல் : உண்மை காரணம் என்ன?

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக அறிவித்திருந்தார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 12:45 PM IST
  • கமல்ஹாசன் கடந்த 5 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
  • சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
  • அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் கமல் விலகல் : உண்மை காரணம் என்ன? title=

தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.  இந்த 5 சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  சினிமாவில் பல சாதனைகளை புரிந்துள்ள கமல், தற்போது தொலைக்காட்சியிலும் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளார்.  இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது விஜய் டிவி.  இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் பங்குபெற்ற முக்கிய போட்டியாளர்களை வைத்து 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பு செய்தது.  

மேலும் படிக்க | விக்ரம் படம் தொடர்பாக வீடியோவுடன் சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடங்கி வைத்து அதனையும் தொகுத்து வழங்கி வந்தார்.  இந்நிலையில் திடீர் என்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.  விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அதன் பின்பு கமலுக்கு பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகமானது.  ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று எதிர்பார்த்து இருந்து நிலையில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  

இந்நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.  இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லாததே கமல் விலக்கியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  இன்று காலை விக்ரம் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்து இருந்தார்.  கமலின் போர்சன்ஸ் கடந்த மாதமே நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் விக்ரம் படத்தை காரணம் காட்டி கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது.

 

மேலும் படிக்க | BB Ultimate: பிக்பாஸ் கமலஹாசன் அல்டிமேட்டில் இருந்து விலகுவது ஏன்? உறுதியான விலகல்! ரசிகர்கள் ஏமாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News