’விக்ரம் சக்சஸ்’ சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2022, 02:12 PM IST
  • விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் விற்பனை
  • ரூ.122 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்
  • படத்தின் பட்ஜெட்டில் பெரும் தொகை கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சி
’விக்ரம் சக்சஸ்’ சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா? title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் சூட்டிங்கில் தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டும் என்பதற்காக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்துகூட கமல்ஹாசன் விலகினார். இதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் சூட்டிங் மற்றும் கமல் சார்ந்த காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரஜினிகாந்த் படத்தில் வைகைப் புயல் - கலக்கும் நெல்சன் திலீப்குமார்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததையொட்டி, கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இனி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், படத்தின் வியாபாரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் சுமார் 112 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

படத்திற்கு செலவழிக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டில் பெரும் தொகை இதன் மூலமே கிடைத்திருப்பதால், விக்ரம் ரிலீஸூக்கு முன்பே லாபகரமான படமாக மாறியுள்ளது. விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள ஸ்டாரான பகத் ஃபாசில் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். அவர்களுடைய கதாப்பாத்திரங்கள் சீக்ரெட்ஸாக வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளாராம். இப்படத்தை கமல்ஹாசன் பங்குதாரராக இருக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.  

மேலும் படிக்க | வில்லன் அவதாரம் எடுத்த மற்றொரு தமிழ் ஹீரோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News