24 மணி நேரத்தில் இந்தி விக்ரம் வேதா படைத்த சாதனை
விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கின் ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த படம் விக்ரம் வேதா. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். வித்தியாசமான திரைக்கதையாலும், நடிகர்களின் அற்புதமான நடிப்பாலும் படமானது மாபெரும் வெற்றி பெற்றது.
11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. மேலும் இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டும் அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.
இதைத் தொடர்ந்து இந்தியில் விக்ரம் வேதா ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டிலும் புஷ்கர் - காயத்ரியே படத்தை இயக்குகின்றனர். இதில், மாதவன் கதாபாத்திரத்தில் சையிப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபத்திரத்தில் கிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். இதனால் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் படிக்க | ஆந்திரா, தெலுங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட '3' திரைப்படம்: தூள் கிளப்பும் வசூல்!!
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவேறியதை அடுத்து சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
இந்நிலையில் இந்தி விக்ரம் வேதா ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அதனை 42 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், 9 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர்.24 மணி நேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை கடந்திருப்பதால் இன்னும் சில நாள்களில் 1 கோடி பேர் பார்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படமானது 175 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அவர் கலந்துகொண்ட ஒரே படப்பிடிப்பு அதுதான் - மகாராணி மறைவுக்கு கமல் இரங்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ