விவேக் முதல் விஜய் ஆண்டனி வரை..பேரிழப்பை சந்தித்த சினிமா பிரபலங்கள்..!
Tamil Celebrities who lost their Family: தமிழ் சினிமாவில், பிரபலங்கள் சிலர் தங்களது பிள்ளைகளையும் ரத்த சொந்தங்களையும் இழந்துள்ளனர். அவர்கள் யார்..?
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இவர் மட்டுமன்றி, கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது சொந்தங்களை இழந்துள்ளனர்.
சிம்ரன்:
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சிம்ரனுக்கு மோனல் நமோனல் நாவல் என்ற சகோதரி இருந்தார். பார்வை ஒன்றே பாேதும், பத்ரி, சமுத்திரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். மோனல், 2002ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், பிரபல நடன இயக்குநரான பிரசன்னா சுஜித்தை காதலித்து வந்ததாகும் அந்த காதல் முறிவில் முடிந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. சிம்ரனின் சகோதரியும் நடிகையுமான மாேனல் நாவல் உயிரிழந்த சம்பவம் அப்போது திரையுலகில் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
விவேக்:
கோலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்தவர், விவேக். நடிகர் என்பதை தாண்டி, பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூக ஆர்வலராகவும் இருந்தார். ஆனால், இவர் வாழ்வில் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு பெரும் சோகம் தாக்கியது. விவேக்கிற்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். 2015ஆம் ஆண்டு, விவேக்கின் இளைய மகன் பிரசன்னா டெங்கு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 1 மாத காலம் மருத்துவமனையில் இருந்த அவர், மூளைசாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேரிழப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் விவேக் 2021ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க | “எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க..” அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.!
பாடகி சித்ரா:
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர், சித்ரா. தமிழ், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளை தாண்டி வெளிநாட்டு மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு நந்தனா என்ற பெண் குழந்தை இருந்தது. 2011ஆம் ஆண்டு, துபாயில் நடைப்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு கிளம்பி கொண்டிருந்த சமயத்தில்தான் தனது குழந்தை காணாமல் போயிருப்பதை கவனித்தார். அவரை தேடியபோது, வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் குழந்தை மிதந்து கொண்டிருப்பதை கவனித்தார். உடனடியாக அக்குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், அக்குழந்தை முன்பே உயிரிழந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். சித்ராவின் குழந்தை ‘டவுன் சிண்ட்ரோம்’ என்ற மூளை பாதிப்புடன் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனா:
குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் ஹீரோயினாக நடித்து, தற்போது பல ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருபவர், மீனா. இவருக்கு 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவரும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார். வித்யாசாகர், 2022ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதையடுத்து அவரது இரண்டு நுரையீரல்களும் பாதிப்படைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் உயிரிழந்தார்.
போஸ் வெங்கட்:
குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர், பாேஸ் வெங்கட். இவரது சகோதரி வரமதி கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இறப்பில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் சென்னை வந்தார். சகோதரியின் இறப்பை தாங்காமல் அவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து தன்னுடன் பிறந்த இருவரையும் போஸ் வெங்கட் இழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விஜய் ஆண்டனி:
கோலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது 16 வயது மகள் மீரா, நேற்று அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை இன்று அடைக்கலம் செய்தனர். மீராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியின் தந்தை இவருக்கு 7 வயதாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டதாக முன்னதாக ஒரு பட விழாவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பலரையும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ