நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை!

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை, 12ம் வகுப்பு படித்து வந்தவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவல் ஆழ்வார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2023, 11:10 AM IST
  • விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு.
  • மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவா என விசாரணை.
நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை! title=

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எனக் கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பலியான சர்ச் பார்க்கில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  அதிகாலை வேளையில் தூக்கிட்ட நிலையில் மீரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்.

vijay

மேலும் படிக்க | லோகேஷ் - ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது? ஹாட் அப்டேட்

மீரா சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் இருந்து உயிர்பிழைத்து மீண்டு வந்துள்ளார்.  இந்நிலையில், தற்போது அவரது மகள் இறந்த சம்பவம் அவருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

மேலும் படிக்க | நயன்தாரா நடிப்பில் 'மண்ணாங்கட்டி'..! ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வைரல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News