புதுடெல்லி: சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தற்கொலை செய்து கொண்ட செய்தி பேரிடியாக வந்து இறங்கியது. இந்த ஆண்டின் இறுதியில் அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கும் சித்ரா தொடர்பான மற்றுமொரு செய்தி வெளியாகி அவரது ரசிகர்களின் துக்கத்தை அதிகரித்திருக்கிறது.


இன்று சித்ரா (VJ Chithra) உயிருடன் இருந்திருந்தால், இந்த நாள் கோலாகலமான நாளாக இருந்திருக்கும். தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாய், பல தொலைகாட்சித் தொடர்களில் நடித்து, கதாபாத்திரமாகவே ஒன்றிப் போகும் நடிப்புத் திறன் கொண்டவர் சித்ரா என்னும் முல்லை.

 

அவரது திறமையால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு திரைப்பட  (cinema) வாய்ப்பும் வந்திருக்கிறது. சித்ரா நடித்த திரைப்படத்தின் போஸ்டரை, இயக்குநர் சபரீஷ் வெளியிட்டிருக்கிறார். அவர் போஸ்டரையும் மட்டும் வெளியிடவில்லை, கனத்த இதயத்துடன் சித்ராவுக்கு அஞ்சலியையும் செலுத்தியிருக்கிறார்.



கனவுகள் நிறைந்த பெண்களின் சுவரொட்டியை வெளியிடுவதற்கான நேரம் இது !! என்று குறிபிட்டுள்ள இயக்குநர் சபரிஷ், அற்புதமான தோற்றத்துடன், திறமையான  வி.ஜே. சித்ராவின் அறிமுக திரைப்படமான ’கால்ஸ்’ (calls)- இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (First Look Poster) இது! என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த "Calls" திரைப்பட உலகில் குறிபிட்ட இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்க, இறுதியில் மரணத்தின் "Calls" ஆக மாறியது காலத்தின்  கோலம் தான்.

 


 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR