பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகராக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் முட்டையை வைத்து சொல்லி அடி என்ற டாஸ்க் நடைபெற்றது. இதற்கு நடுவராக ஜித்தன் ரமேஷ் நியமனம் செய்யபட்டு இருந்தார். மேலும் இந்த போட்டியை நடத்தும் பொறுப்பை திண்டுக்கல் தண்டபாணி என்பவரும் ஏற்று கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முட்டை என்று அவர் சொல்லும்போது யார் அதை எடுக்கிறார்களோ அவர் எதிராளியின் தலையில் முட்டையை அடிக்க வேண்டும் என்பதுதான் இந்த போட்டியின் விதிகள். எப்போதும் சந்தை போட்டுக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் (Bigg Boss Tamilஹவுஸ்மேட்ஸ் இந்த போட்டியை ஜாலியாக விளையாடினர்.


ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: "யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்


இதற்கிடையில் போட்டியை நடத்திய திண்டுக்கல் தண்டபாணியின் குரலை கேட்ட பலரும் இது எதோ மிகவும் பரிட்சயமான குரல் போல இருக்கிறதே என்று தான் எண்ணி இருப்பார்கள். அதுவும் பலரும் இது முன்னாள் பிக் பாஸ் (Bigg Boss Tamil 4போட்டியாளரான கவினின் குரலாக தான் இருக்கும் என்று கூறினர். இந்த போட்டியை தன்னுடைய பெயரை சொல்லாமல் திண்டுக்கல் தண்டபாணி என்னும் பெயரில் கவின் நிகழ்ச்சியை நடத்தினார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.


இந்த நிலையில் நடிகர் கவின் (Kavin) இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியதாவது, '' அது நான் இல்லைப்பா. திண்டுக்கல் தண்டபாணியாக குரல் கொடுத்த நிஜமான கலைஞருக்கு இந்த கிரெடிட்டுகள் போய் சேரட்டும்,'' என விளக்கம் அளித்துள்ளார். 


 



 


ALSO READ | நம்பர் 1 பதவிக்கு அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்! புரோமோ வீடியோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR