தமிழில் உச்ச நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கியுள்ள அட்லி, அதன் அடுத்தகட்டமாக பாலிவுட் சென்றுள்ளார். பாலிவுட் சென்றுள்ள நிலையில் முதல் வாய்ப்பே ஷாருக்கானை வைத்து இயக்கும் விதமாக அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஷாருக்கான் மகனின் வழக்கு விவகாரம் உள்ளிட்டவை காரணமாகக் காலதாமதம் ஆனதாகச் சொல்லப்பட்டது. இதற்கு நடுவே, திரைக்கதையில் பல இடங்களில் மாற்றம் செய்யச் சொல்லி ஷாருக் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அட்லி சம்மதம் தெரிவிக்காததால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும்கூட சில தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் இப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடந்துவருவதுடன் இப்படத்துக்கு ‘ஜவான்’ எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்லாமல் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒன்றை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



படத்தின் கதையைப் பொறுத்தவரை, தந்தை - மகன் என இரு ரோல்களில் இதில் நடிக்கவுள்ளாராம் ஷாருக்கான். படத்தில் மகனின் கேரக்டர் டான் போலவும் தந்தையின் கேரக்டர் RAW பிரிவு அதிகாரியாகவும் அமைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் இந்தியன் படத்தில் சேனாபதி ரோலுக்காக கமல்ஹாசனுக்குப் பயன்படுத்தப்பட்ட பிராஸ்தடிக் மேக்-அப் முறை இப்படத்தில் ஷாருக்குக்கு போடப்படவுள்ளதாம்.


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரியாக ஒரு கமல் நடித்திருப்பார். தந்தை கமலோ நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தில் இருப்பது போல காட்டப்பட்டிருக்கும். அட்லி இயக்கவுள்ள ஷாருக்கான் படமும் தந்தை- மகன் டான் - RAW அதிகாரி எனக் கூறப்படுவதால் இப்படம் இந்தியன் படத்தைப் போல இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.



மேலும் படிக்க | ஓடிடியிலும் உலகளவில் மிரட்டிய RRR- அப்படி என்ன சாதனைனு தெரியுமா?


அட்லியைப் பொறுத்தவரை அவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அட்லி இயக்கும் படங்கள் பிற படங்களைப் பிரதி எடுத்தது போல உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு உண்டு. குறிப்பாக விஜய்யை வைத்து அவர் இயக்கிய மெர்சல் படம், கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தைப் போல இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அதே கமல் நடித்த இந்தியன் படம் போல ஷாருக்கானின் இந்தப் படம் இருக்கப்போவதாக நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | ‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR