இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவான படம் ஆர்.ஆர்.ஆர். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் இறுதியாக கடந்த மார்ச் 25ஆம் தேதி இப்படம் வெளியானது.
பெரும் பொருட்செலவில் பான் -இந்தியா ரிலீஸாக வெளியான இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் தமிழகத்திலும் நல்ல வசூலைக் குவித்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய வெர்சன்களின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 பெற்றது.
இந்தி ஆங்கிலம் உள்ளிட்டவற்றின் வெர்சன்களை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றது. ஆர்.ஆர்.ஆர் கடந்த மாதம் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அதில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, நெட்ஃப்ளிக்ஸில் கடந்த மே 23 முதல் 29ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 18,360,000 மணி நேரம் இப்படம் பார்வையிடப்பட்டுள்ளதாம்.
That’s #RRRMovie for you, World!! https://t.co/F4WEa1RvrQ
— RRR Movie (@RRRMovie) June 1, 2022
மேலும் படிக்க | அஜித்தை அண்ணாமலையுடன் ஒப்பிட்ட பாஜக நிர்வாகி- வெடித்தது புதிய சர்ச்சை!
அதன்படி, ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படமொன்று நெட்ஃப்ளிக்ஸில் அதிக பார்வைகளைப் பெறுவது இதுதான் முதன்முறையாம். இச்சாதனையைத்தான் ஆர்.ஆர்.ஆர் தற்போது படைத்துள்ளது. திரையரங்கு மட்டுமல்லாது ஓடிடியின் வரவேற்பும் ஒரு படத்துக்கு வியாபார ரீதியாகத் தற்போது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர் படைத்துள்ள இச்சாதனை இந்திய சினிமாவில் முக்கியமானவொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR