`ஸ்ரீவல்லி` பாடலுக்கு டான்ஸ் ஆடிய சவுரவ் கங்குலி!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடனமாடும் ஸ்ரீவல்லி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
'புஷ்பா' படம் வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும் இப்படத்தின் பாடல்களும், டயலாக்குகளும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நடனமாடி வருகின்றனர். இவர்கள் நடனமாடுவது மட்டுமல்லாது பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் புஷ்பா படத்தில் ஹிட்டான 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு அதன் ஹைலைட்டான ஸ்டெப்பை போட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த ரீல்ஸ்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | வேட்டையாடு விளையாடு பார்ட்-2 வருமா? கெளதம் மேனனின் பதில்!
ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, விராட் கோலி, ஷாகிப் அல் ஹசன் போன்ற பல வீரர்கள் நடனமாடிய நிலையில் தற்போது இந்த ஸ்ரீவல்லி பாடலுக்கு பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நடனமாடி ட்ரெண்டாகி இருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுடன் இணைந்து இப்பாடலுக்கு ஸ்டெப்பை போட்டுள்ளார். இவர் இதுபோன்று இந்த ட்ரெண்டிங் படத்தின் சில அசைவுகளை செய்வது முதல்முறையல்ல, ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்ட போட்டியாளர் ஒருவருடன் புஷ்பா படத்தின் புஷ்பராஜ் பேசும் டயலாக்கை ஹிந்தியில் பேச சொல்லி கேட்டார்.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த 'புஷ்பா' திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரியளவில் வணிக ரீதியில் வெற்றிபெற்ற படமாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் ஒவ்வொரு ரசிகர்களும், பிரபலங்களும் இப்படத்தின் பாடல்கள் அல்லது டயலாக்குகளை ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட பத்தாயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும் படிக்க | 14 கோடிக்கு ஏலம் எடுத்தாலும், வீரருக்கு செல்லும் பணம் இவ்ளோதானா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR