2022-ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது. பல கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு அணிகளால் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். பலரும் அதிசயிக்கும் அளவிலான தொகைக்கெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு அந்த முழு பணமும் சென்று சேருமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்லமுடியும். ஆம், இந்த ஏலத்தில் அவர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட தொகை மொத்தமாக அவர்களின் கைக்கு சென்று சேருவதில்லை என்பதே நிதர்சனம்.
மேலும் படிக்க | இதுவரை இந்திய அணி வீரர்களுக்குள் நடைபெற்ற முக்கிய சண்டைகள்!
ஏலத்தில் கொடுக்கப்படும் தொகையானது கான்டராக்ட்டுகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. உதாரணமாக ஒருகுறிப்பிட்ட அணி, ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட் வீரரை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கிறது என்றால் இரண்டு வருட கான்டராக்ட்டாக இருப்பின் கொடுக்கப்படும் தொகையானது இரட்டிப்பாகி 16 கோடியாக கிடைக்கும். இவ்வாறு கால அளவுகளின் அடிப்படையில் தொகை இரட்டிப்படையும். அதேபோல ஏலத்தில் அறிவிக்கப்பட்ட தொகையில், ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகை மட்டுமே கிரிக்கெட் வீரர்களின் கைக்கு கிடைக்கிறது.
எத்தனை வருட கான்டராக்ட்டாக இருந்தாலும் அந்த பணம் முழுமையாக வீரர்களுக்கு கிடைக்காமல் டிடிஎஸ்(TDS) எனப்படும் வரி விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தொகையில் 10% எடுத்துக்கொள்ளப்படும். உதாரணமாக ஒரு வீரருக்கு 10 கோடி ரூபாய் பணம் கொசடுக்கப்பட்டால் அதில் 10% வரி பிடித்தம் செய்யப்பட்டு அவருக்கு 9 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த டிடிஎஸ் வரி பிடித்தம் மட்டுமல்லாது, அந்த வீரர் வருடத்திற்கு செலுத்தும் வருமான வரி இவற்றின் அளவை பொறுத்து அந்த வீரர் பெரும் தொகை அமையும்.
மேலும் இந்த தொகையானது இந்திய வீரர் மற்றும் வெளிநாட்டு வீரர் என ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. இதுவே வெளிநாட்டு வீரராக இருப்பின் அவருக்கு டிடிஎஸ் 20% வரி பிடிக்கப்படுகிறது. உதாரணமாக 10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருந்தால் அவருக்கு முழுமையாக கிடைப்பது 8 கோடி ரூபாய் ஆகும். வெளிநாட்டு வீரரை ஐபிஎல்-ல் விளையாட அனுப்பிவைக்கும் அந்த நாட்டு கிரிக்கெட் போர்டுக்கு, நமது இந்திய கிரிக்கெட் போர்டானது வெளிநாட்டு வீரர்களை எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கிறதோ அதில் 20% பணத்தை அந்த போர்டுக்கு செலுத்த வேண்டும். இந்த தொகையானது ஐபிஎல் சென்ட்ரல் ரெவன்யூ பூல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | இதற்கு முன் ஜடேஜா கேப்டனாக இருந்த அணிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR