தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாரு மணமகளாக மணமேடை ஏறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, பத்மாவின் நாடகத்தால் சீனு நீங்க சொல்ற மாதிரியே செய்கிறேன் என்று வாக்கு கொடுக்க பத்மா ஷாரு தான் என் மருமகள், அவ கழுத்தில் தாலியை கட்டு என்று மணமேடையில் ஏற்றுகிறாள். 


இதை தொடர்ந்து இங்கே சீனு மற்றும் ஷாரு இருவரும் பாதபூஜை செய்ய தயாராகின்றனர். மறுபக்கம் மாயா பஞ்சாப் செல்லும் லாரியில் மயங்கி கிடக்க வழியில் லாரியில் ஏறிய பக்தர்கள் மாயா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். 


மேலும் படிக்க | ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசும் Ex மனைவி-பிரபல நடிகை ப்ரியா ராமன்! என்ன சொன்னார் தெரியுமா?


அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஒரு காரை பிடித்து ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர், மாயா, ஷாரு பாத பூஜை செய்ய போகும் சமயத்தில் மண்டபத்திற்குள் வந்த மாயா சீனு என்று கூப்பிட்டு ஷாக் கொடுக்கிறாள். 


தன்னை யாரோ கடத்தி விட்டதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரகுராம் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்ல மாயா இப்போதைக்கு கல்யாணம் நடக்கணும் என்று சொல்கிறாள். 


அதன் பிறகு மணி லிங்கம் தான் இப்படி செய்திருக்கணும், உங்க அம்மாவும் இதற்கு உடந்தை என்று சொல்ல சீனு அதை நம்ப மறுக்கிறான். இதையடுத்து மாயா மீண்டும் மணமகளாக மணமேடை ஏற்றப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ