WHATCH: வெளியானது சந்தானம் நடிப்பில் உருவான டகால்டி பட டீசர்..!
நடிகர் சந்தானம் நடித்துள்ள `டகால்டி` திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது!
நடிகர் சந்தானம் நடித்துள்ள "டகால்டி" திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது!
இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் டகால்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு சந்தானத்துடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளார். காமெடி, காதல், ஆக்ஷன் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.
சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் யோகி பாபுவைப் பார்த்து நீ இவ்ளோ பெரிய நடிகரா வருவனு நினைச்சே பாக்கலடா என்று கலாய்க்கும் சந்தானம், அஜித் - விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று சொல்லும் நடிகை ரித்திகா சென்னிடம் அப்புறம் அட்லீ - சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க என்று நகைச்சுவை பேசியுள்ளார்.
சந்தானம் - யோகி பாபு இணைந்து காமெடியில் கலக்க இருக்கும் இந்தப் படம் இந்தமாததில் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.