Best Actress of Tamil Cinema 2023: இந்த ஆண்டு, தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க வகையில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. பல கதாநாயகிகளுக்கு இந்த ஆண்டு அவர்களின் திரை வாழ்க்கையை பெரிதாக தூக்கி விட்டுள்ளது. சில நடிகைகளுக்கு, ரசிகர்கள் ‘நல்ல நடிகை’ என்ற பெயரும் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

த்ரிஷா:


சமீபத்தில் 21ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடியவர் த்ரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று, மாடலிங் துறையில் கால் பதித்து பின்பு சினிமாவிற்குள் நுழைந்தவர் த்ரிஷா. இந்த ஆண்டு இவர் நடித்த பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. ஆண்டின் தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக வந்து மனதை கொய்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ படத்தில் சத்யாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இடையில் அவரது ‘தி ரோட்’ திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவரை இந்திய அளவில் அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளனர். 


ஜோதிகா:


சினிமாவில் நடிக்க வந்த போதும் ரசிகர்களை கவர்ந்து, கம்-பேக் கொடுத்த பின்பும் அதே பொலிவுடன் வலம் வரும் நடிகை, ஜோதிகா. திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்த அவர், இந்த ஆண்டு மம்மூட்டியுடன் ‘காதல் தி கோர்’ எனும் படத்தில் ஜோடியாக நடித்தார். காதல்-ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இப்படத்தில் அவர் நன்றாக நடித்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், இவரையும் நல்ல நடிகை என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 


சமந்தா:


சமந்தா, இந்த வருடம் குஷி மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். சாகுந்தலம் படத்தில் நடித்த போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. படமும், பெரிதாக வசூலை பெறவில்லை. விமர்சனத்திலும் அடி வாங்கியது. அடுத்து வெளியான குஷி படத்திற்கும் அதே நிலைதான். ஆனால், இவ்விரு படங்களிலும் சமந்தாவின் நடிப்பு நன்றாக பாராட்டப்பட்டது. 


மேலும் படிக்க | சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சிவகார்த்திகேயனின் படம்! என்ன படம் தெரியுமா?


நயன்தாரா:


‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு உரியவர், நயன்தாரா. ஜவான் படத்தில் நடித்து கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று விட்டார். இப்படத்தில் அவர், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். இதனால், இவர் இந்தியா முழுவதும் கூகுளில் தேடப்பட்ட நடிகையாக மாறினார். சில வாரங்களுக்கு முன்பு அவரது அன்னபூரணி படம் வெளியானது. இது, நயன்தாராவை சுற்றி நிகழும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 


நிமிஷா சஜயன்:


இந்த ஆண்டில் தமிழ் சினிமாவிற்குள் வந்த புது வரவு நாயகி, நிமிஷா சஜயன். ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்த இவர், தமிழில் இந்த ஆண்டு அறிமுகமானார். இவரது நடிப்பில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின. தொடர்ந்து சில படங்களிலும் இவர் கமிட் அகியிருக்கிறார். இவரது இயற்கையான அழகும், சிறந்த நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. 


மேலும் படிக்க | சசிகுமார், சமுத்திரகனி வரிசையில்-அமீர்க்கு ஆதரவாக குரல் கொடுத்த இன்னொரு இயக்குநர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ