2023ஆம் ஆண்டு கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த புது நடிகைகள்!

2023 New Actress in Tamil Cinema: தமிழ் திரையுலகிற்கு இந்த ஆண்டு பல புது முகங்கள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார், என்னென்ன படங்களில் நடித்துள்ளனர் தெரியுமா? 

1 /8

இந்த 2023ஆம் ஆண்டில் பல நடிகைகள் திரையுலகிற்குள் பிரவேசித்துள்ளனர். அந்த நடிகைகள் யார் யார் தெரியுமா? 

2 /8

மிர்னா மேனன்:சமீபத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படத்தில் அவருக்கு மருமகளாக நடித்திருந்தவர், மிர்னா மேனன். அறிமுகமானமுதல் படத்திலேயே மிர்னா மக்களை பெரிதாக ஈர்த்துவிட்டார். 

3 /8

ப்ரீத்தி அஸ்ரானி:சீரியல் நடிகையாக இருந்த ப்ரீத்தி அஸ்ரானி, சசிகுமார் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான அயோத்தி படத்தில் நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

4 /8

மீனாட்சி சவுத்ரி: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருந்த கொலை படத்தில் நாயகியாக நடித்திருந்தவர், மீனாட்சி சவுத்ரி. இவர், தற்போது தளபதி 68 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். 

5 /8

ராதிகா ப்ரீத்தி: சீரியலில் நடித்து வெள்ளித்திரைக்கும் நுழைந்த நடிகைகளுள் ஒருவர், ராதிகா ப்ரீத்தி. இவர், சமீபத்தில் வெளியான 80ஸ் பில்டப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

6 /8

நிமிஷா சஜயன்: மலையாள நடிகையான நிமிஷா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சித்தா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த வருடம் ரசிகர்களை அதிகம் ஈர்த்த புது முகங்களுள் இவரும் ஒருவர். 

7 /8

சம்யுக்தா: தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர், சம்யுக்தா. தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த புது முக நாயகிகளின் பட்டியலில் நிமிஷா முதல் இடத்தில் இருக்கிறார். 

8 /8

சானியா ஐயப்பன்: சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், சானியா ஐயப்பன். இவர் சில மலையாள தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஈவருக்கு தமிழ் ரசிகர்களும் அதிகம் பேர் உள்ளனர்.