நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றுள்ளார் இயக்குநர் அட்லி. அந்த வகையில் ஷாருக்கானுடன் கைகோத்துள்ள அட்லி, ஜவான் எனும் படத்தை இயக்கிவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தந்தை - மகன் என ஷாருக்கான் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் ஜவான் இந்தி, தமிழ் உள்பட பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது. அட்லியின் முதல் படமான ராஜா ராணி மற்றும் பிகில் ஆகிய படங்களில் நடித்த நயன்தாராவே இப்படத்திலும் நடிக்கவுள்ளார். 


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாராவின் முதல் பாலிவுட் படமாக அமையவுள்ள இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி சுனில் க்ரோவர் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். 


மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? - # Vikram Box Office Report



இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய்யை வைத்து அட்லி இயக்கிய தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சமந்தாவைத்தான் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவைக்க அட்லி திட்டமிட்டிருந்தாராம். அதன்படி நடிகை சமந்தாவையும் கடந்த 2019ஆம் ஆண்டு படக்குழு அணுகியதாம். 


ஆனால், அப்போது நடிகர் நாகசைதன்யாவுடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார் சமந்தா. அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவருக்குச் சில சிக்கல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால்தான் பெரும் பட்ஜெட் படமான இதில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தபோதும் அவரால் நடிக்க முடியவில்லையாம்.


மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR