நடிகர் விக்ரம் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டாரா?
`மஹான்` படத்திற்கு பிறகு சியான் விக்ரம் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
எவ்விதமான கடினமான கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக நடிப்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் இறுதியாக ஓடிடியில் வெளியான படம் 'மஹான்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி இயங்குதளத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த படத்தின் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் விக்ரம் வேறு எந்த படத்தின் பணிகளையும் தொடங்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக இவரை பற்றியோ, இவர் நடிக்கும் படங்கள் பற்றியோ எவ்வித அப்டேட்டும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | 'கைதி' படத்தின் தொடர்ச்சியா 'விக்ரம்'? லோகேஷின் மல்டிவெர்ஸ் கான்செப்ட்!
சில லேட்டஸ்ட் தகவல்களின்படி நடிகர் விக்ரம் தற்போது குடும்ப உறுப்பினர்களுடன் பிசியாக லண்டனில் நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாடி வரும் இவர் இன்னும் சென்னை திரும்பவில்லை, இன்னும் இரண்டு வாரங்களில் அவர் சென்னை திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரம் குடும்பத்தினருடன் மஹான் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குடும்பமும் லண்டனில் உள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் தற்போது 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டார், இப்போது இந்த படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதில் தனது காட்சியை விரைவில் விக்ரம் நடித்து முடிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகும் 'தளபதி 66'!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR