பீஸ்ட் குழுவின் மாஸ்டர் பிளான் – தகர்க்குமா KGF2
பீஸ்ட் திரைபடம், கேஜிஎப்2 படத்துக்கு ஒருநாளுக்கு முன்பே ரிலீஸாகிறது.
இளையதளபதி விஜய் மற்றும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாகிறது. புனித வெள்ளி மற்றும் சித்திரைத் திருநாள் விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி அந்த தேதியில் பீஸ்ட் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இதற்கும் அடுத்த நாள் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘கேஜிஎப் 2’ ரிலீஸ் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | SK20-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கேஜிஎப் 2 திரைப்படமும் அந்த தேதியில் ரிலீஸாவதால், ஒரு நாளுக்கு முன்பே பீஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய சன்பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளது. இங்குதான் பீஸ்ட் குழுவின் மாஸ்ட் பிளான் இருக்கிறது. படம் ரிலீஸ் குறித்து இரண்டு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவில் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் குழுவினர் சமரசம் செய்துகொள்ளவில்லை.
இதனால் பாக்ஸ் ஆஃபீஸ் மற்றும் தியேட்டர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என நினைத்த சன்பிக்சர்ஸ், கேஜிஎப் படம் ரிலீஸாகும் ஒருநாளுக்கு முன்பே அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதியே ரிலீஸ் செய்கிறது. இது பீஸ்ட் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்திருப்பதுடன், முக்கிய திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது, விஜய் படம் ரிலீஸால் கேஜிஎப்2-க்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் மிக குறைவான இடங்களில் ரிலீஸ் செய்யுமளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பீஸ்ட் ரிலீஸாகாமல் இருந்திருந்தால் கூடுதல் தியேட்டர்கள் மற்றும் முக்கியமான தியேட்டர்களில் கேஜிஎப் ரிலீஸாகியிருக்கும். இப்போது, அந்தப் படத்துக்கான தமிழக பாக்ஸ் ஆபீஸ் என்பது கணிக்க முடியாத வகையில் இருக்கிறது. இதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை பீஸ்ட் படம் கேஜிஎப் 2 வசூலை தாண்டிவிடும் என்பது பலரின் திடமான நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரத்தில் பார்ட் 1 கேஜிஎப்-ஐப்போல் கேஜிஎப்2 இருக்கும்பட்சத்தில் ரிலீஸூக்குப் பிறகு அதிகமான தியேட்டர்களை பெறவும் வாய்ப்புகள் உள்ளன. தியேட்டர் அதிபர்களைப் பொறுத்தவரை, மிகப்பெரிய பட்ஜெட் படங்களான இரண்டும், அடுதடுத்த நாட்களில் ரிலீஸாவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், கலெக்ஷன் ரீதியாக கவலை அடைந்துள்ளனர். வெவ்வேறு நாட்களில் ரிலீஸாகியிருந்தால், கூடுதல் வசூல் கிடைத்திருக்க வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பீஸ்ட் படத்துக்கு ஆரம்பித்தது சிக்கல் : தியேட்டரில் ரிலீஸ் இல்லையா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR