SK20-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!

சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே20ல் அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2022, 07:13 PM IST
  • சிவகார்த்திகேயன் தற்போது SK20 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
  • டான் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
  • அயலான் படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
SK20-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை! title=

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  தமிழ் திரையுலகில் இவருக்கென்று குறிப்பிடகக்க ரசிகர்கள் பட்டாளம் நிறைந்துள்ளது.  சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் சிவகார்த்திகேயனை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.  இந்த திரைப்படத்தின் மூலம் இவரது படங்களை ரசிகர்கள் கவனிக்க தொடங்கிவிட்டனர்.  

மேலும் படிக்க | பீஸ்ட் படத்துக்கு ஆரம்பித்தது சிக்கல் : தியேட்டரில் ரிலீஸ் இல்லையா?

தற்போது சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார்.  இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா மோகனுடன் நடித்துள்ளார்.  இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.  அதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் பணிகளும் இறுதி நிலையிலுள்ளது.

 

இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப்.கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்ற ஜதிரத்னலு என்கிற வெற்றி படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் அனுதீப்.  இந்த படத்தில் ஏற்கனவே வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.  தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக  வெளியிட்டுள்ளது, அதாவது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  மரியா ரியாபோஷப்கா  ஒப்பந்தமாகியுள்ளார்.  இவர் 'எடெர்' என்கிற படத்திலும், 'ஸ்பெஷல் ஆப்ஸ்' என்கிற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.  

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ள இந்த படத்தை வெங்கடேஷாவாரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கப்பட்டது.  இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | இதனால் தான் 83 திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக தாமதமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News