ஆஸ்கார் பிரச்சனைக்கு பின் இந்தியா வந்த வில் ஸ்மித்! காரணம் என்ன
ஆஸ்கார் விருதுகள் விழாவில் நடத்த பிரச்சனைக்கு பின்னர் ஹாலிவுட் நடிகர் இந்தியாவிற்கு வந்தபோது, எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை முன்னர் தெரியாதவர்களுக்கு கூட ஆஸ்கார் விருதுகள் விழாவிற்கு பிறகு நன்கு தெரிந்திருக்கும். ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் வில் ஸ்மித்தின் மனைவியை நகைச்சுவை நடிகர் க்றிஸ் ராக் கேலி செய்ததற்காக மேடையில் சென்று அவரை வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய செய்தது நிகழ்ச்சியின் நேரலையும் சிறிது நேரம் ஒளிபரப்பப்படாமல் இருந்தது. வில் ஸ்மித் செயலுக்கு சிலர் ஆதரவும், சிலர் கண்டனமும் தெரிவித்து வந்தனர்.
மேலும் படிக்க | ஒரே ஒரு அறை! வில் ஸ்மித்தின் பேங்க் அக்கவுண்ட் வரை பாதிப்பு!
இந்த சம்பவம் நடந்த சில மணித்துளிகளில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த ஆண் நடிகருக்கான ஆஸ்கார் விருதினை நடிகர் வில் ஸ்மித் பெற்றார். பின்னர் வில் ஸ்மித் மிமீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வரை 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் விருதுகளின் நிகழ்ச்சிகள் எதிலும் பங்குபெற கூடாது என்று ஆஸ்கார் அமைப்பு தடை விதித்தது. மேலும் சம்பவம் அவரது திரை வாழ்க்கையிலும் சில தாக்கத்தை ஏற்படுத்தியது, அவர் ஒப்பந்தமாகியிருந்த சில பெரிய பட்ஜெட் படங்களிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அவர் இந்தியா வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையின் சலினா விமான நிலையத்தில் அவர் நின்ற புகைப்படங்கள் மற்றும் ஒரு ஹோட்டலில் அவர் இருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் பரவியுள்ளது. இணையத்தில் வெளியான அந்த புகைப்படத்தில் அவருடன் ஒரு துறவியும் காணப்படுகிறார், இதனை வைத்து பார்க்கும்பொழுது அவர் மன அமைதிக்காக ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் கலாச்சாரம் மற்றும் தெய்வீகத்தை பின்பற்றுபவர் என்றும் சில செய்திகள் கூறுகிறது, ஏனெனில் இவர் ஏற்கனவே 2019ம் ஆண்டு ஹரித்வாருக்கு சென்று சில சமய சடங்குகளில் ஈடுபட்டார், மேலும் இவர் ஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குருவை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்த நடிகர் வில் ஸ்மித்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR