பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎஃப். யாஷ் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இந்திய சினிமாவில் பிரபலமடைந்தார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. தமிழ் பட ஹீரோவுக்கு இணையாக யாஷுக்காகவும் ரசிகர் படை இன்று தியேட்டரில் கூடியது.



படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை படத்துக்கு கொடுத்து வெற்றி பெற செய்திருக்கின்றனர். கேஜிஎஃப் மூன்றாவது பாகமும் வரவிருப்பது உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். 


மேலும் படிக்க | பிரதமருக்கே சவால் விட்ட ராக்கி பாய்! கேஜிஎஃப் 2 விமர்சனம்!


பீஸ்ட்டா, கேஜிஎஃப்பா என கேட்டால் நிச்சயம் கேஜிஎஃப்தான் சிறந்த படம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் படம் வெற்றி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.



இதற்கிடையே, யாஷ் ரசிகர்கள் 25 ஆயிரத்து 650 சதுர அடியில் யாஷின் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். முதலில் 120×170 அடியில் உருவாக்கவே திட்டமிட்டு, 135×190 அடியில் போஸ்டரை உருவாக்கியிருக்கின்றனர். இந்தப் போஸ்டரானது உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.


 



இந்நிலையில், ரசிகர்கள் போஸ்டர் உருவாக்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த யாஷ்,“ எனது ரசிகர்கள்தான் எனக்கு பலம். உங்களது அன்பும், ஆதரவும்தான் எனது வலிமை. இந்த உலகம் நமக்கானது” என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | 10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR