10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா?

உலகம் முழுவதும் ரிலீஸாகும் கேஜிஎப் 2 நாளை பத்தாயிரத்துக்கும் மேலான தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2022, 08:55 PM IST
  • உலகளவில் பத்தாயிரம் தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகும் கேஜிஎப் 2
  • முன்பதிவில் ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடித்துள்ளது
  • வசூலிலும் சாதனை படைக்குமா? என வியப்பு
 10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா? title=

ஆக்ஷன் கிங் யாஷ் நடித்திருக்கும் கேஜிஎப்2 திரைப்படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அகில இந்திய அளவிலும் கேஜிஎப் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸாகி, வசூல் சாதனைகளை குவித்து வரும் நிலையில், இப்படம் அந்தப் படத்தின் சாதனைகளை முறியடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பீஸ்ட் ஹிட்டா ஃப்ளாப்பா... தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

இதற்கு காரணம், கேஜிஎப் 1 திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது. முதல் பாகம் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ஆம் பாகம் ரிலீஸாகிறது. தமிழகத்திலும் கூடுதல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருப்பதால், இப்போது அனைவரது பார்வையும் கேஜிஎப் 2 பக்கம் திரும்பியுள்ளது. 

பீஸ்ட் வெளியாவதற்கு முன்பு வரை குறைவான தியேட்டர்களில் ரிலீஸாக இருந்த கேஜிஎப் 2 படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கூடுதல் தியேட்டர் ஒதுக்க முன் வந்துள்ளனர். இதுவே கேஜிப் படத்தின் மீது தியேட்டர் உரிமையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. முன்பதிவில் இந்திய அளவில் சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் படத்தின் சாதனையை கேஜிஎப் முறியடித்துள்ளது. அதேபோல், வசூலிலும் முறியடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உருவ கேலி: நியாயமா நெல்சன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News