துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.  சமீபத்தில் இவரது நடிப்பில் பகீரா படம் வெளியானது.  அதனை தொடர்ந்து தற்போது சைத்ரா வெளியாகி உள்ளது. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சைத்ரா படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவரை தவிர அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்க, இப்படத்துக்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  24 மணிநேரத்தில் நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது. நவம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் படம் வெளியாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சித்தா to கோஸ்ட்-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?


படத்தின் கதை கன்னியாகுமரி பகுதிகளில் நடக்கும் படி அமைந்துள்ளது. படத்தின் தொடக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் யாஷிகா ஆனந்த். நான் ஏன் இங்கு நிற்கிறேன், தனக்கு என்ன ஆனது என்று பிளாஷ்பேக் சொல்ல ஆரம்பிக்கிறார்.  அந்த ஃப்ளாஷ் பேக்கில் யாஷிகாவின் தோழியும் அவரது நண்பரும் ஒரு சாலை விபத்தில் இறந்து விடுகின்றனர், இதனால் யாசிகாவிற்கு மனநல பாதிக்கப்படுகிறது.  இதனை சரி செய்ய அவரது கணவரும் மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். இருப்பினும் யாசிகா ஆனந்த் அடிக்கடி மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார். அடிப்படையிலேயே இது ஒரு பேய் படம் என்பதால் பிளாஷ்பேக்கில் பேய் தனக்கு நடந்த அநியாயங்களை பற்றி சொல்கிறது, இதன் பின்பு என்ன ஆனது என்பதே சைத்ரா படத்தின் கதை.



பொதுவாக பேய் படங்களில் இறந்து போனவர்கள் வேறொரு உடம்பிற்குள் வந்து பழி வாங்குவார்கள், ஆனால் இந்த படத்தில் புதுவிதமாக அவர்களே மனித ரூபத்தில் வந்து பழி வாங்குகிறார்கள். ஆனால் அவர்களை நேரில் பார்ப்பவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.  இப்படி ஒரு சுவாரசியமான கதையை இயக்கியுள்ளார் ஜெனீத் குமார்.  மற்ற படங்களை விட யாஷிகாவும் இந்த படத்தில் சற்று நன்றாகவே நடித்துள்ளார், பல இடங்களில் கைத்தட்டுகளையும் பெறுகிறார். யாசிகாவை தாண்டி படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் மனதில் நிற்பது மொசைகுட்டி தான்.  ஜெய் பீம் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரையும் தாண்டி மற்ற கதாபாத்திரங்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை.


நல்ல கதையை திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர் ஜெயிக்குமார், இன்னும் சற்று கூடுதலாக உழைத்து இருந்தால் நல்ல ஒரு திரில்லர் படமாக அமைந்திருக்கும் இந்த சைத்ரா.  சீன்களாக பார்க்க நன்றாக இருந்தாலும் ஒரு முழு நீள படமாக எங்கேயோ மிஸ் ஆன ஒரு பீல் வருகிறது படம் பார்த்த பிறகு.  சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக உள்ளது மற்றும் பிரபாகரன் மையப்பனின் பின்னணி இசை ஆங்காங்கே பயத்தை ஏற்படுத்துகிறது.  ஹாரர் திரில்லர் படங்களின் ரசிகர்கள் யாசிகாவின் ரசிகர்களாக இருந்தால் இந்த படத்தை கண்டு மகிழலாம்.  மற்றபடி தமிழில் வந்துள்ள மற்றொரு பேய் படம் தான் இந்த சைத்ரா.


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ