இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கு ராயல்டி தொகை சரியாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கான ராயல்டி தொகை அவரது குடும்பத்துக்கு சரிவர சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே பாடலாசிரியர்களுக்கான ராயல்டி தொகையை பெற்று தருவதற்கு IPRS (இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட்) அமைப்பு செயல்பட்டுவருகிறது.


இந்நிலையில் அந்த அமைப்பு சார்பில் சென்னை கதீட்ரல் சாலை தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து , பாடலாசிரியர்கள் விவேகா , மதன் கார்ககி ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “கவிஞர்களுக்கான அட்சய பாத்திரமாகவும் , கலைஞர்களுக்கான வழக்கறிஞராகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது . கலைஞர்கள் பாவம் அவர்கள்  கற்பனைவாதிகள். சட்டம் அறியாதோர். உரிமை தெரியாதோர்.பூமியில் நின்றுகொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய்ப்பாலுக்கும் , நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். 



இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் , ஸ்வரங்கள் மொத்தம் 7 என்பதால் அதன் பிறகு இருக்கும் எண் என்னவென்றுகூட  தனக்கு தெரியாது என்று என்னிடம் கூறினார். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீகூட எங்களுக்கு கிடையாது . 


மேலை நாடுகளில் 100 பாடல்கள் எழுதினால் அவர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும்  செய்ய தேவையில்லை.  பசிபிக் கடல் ஓரத்தில் அவரால் தீவு வாங்கி விட முடியும். பணம் தீர்ந்த பிறகு மீண்டும் பாட்டெழுதி சம்பாதித்து தீவை வாங்கிக்கொள்ள முடியும். 


மேலும் படிக்க | ஓ மை கடவுளே... பத்திரிகையாளர்களை பார்த்து பதறிய மோடி


ஆனால் 7,500 பாடல்கள் எழுதிவிட்டேன்.  இவர்கள் அனுப்பும் சில லட்சங்களுக்காக காத்திருக்கிறேன். திரைத்துறையில் இருப்போரால் 25 ஆண்டுகள் இருக்க முடியும் . 15 ஆண்டுகள்தான் புகழுடன் இருக்க முடியும் .  


கல்லில் நார் உரிப்பது போல இவர்கள் போராடி ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். இசையமைப்பாளர்களும் ,  பாடலாசிரியர்களும் பாவம் , இவர்கள்தான் உருவாக்குபவர்கள் , மூலமானவர்கள். எனவேதான் இவர்களுக்கு ராயல்டி வேண்டும் என்கிறோம். 


10 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தோரை இப்போது உச்சரிக்கவே மறந்துபோன சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பை தோற்றுவித்த எம்.வி. சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட். ஜெயகாந்தனின்  தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலுக்கு இசையமைத்தவர் அவர். அரசு , நிறுவனம் , நீதிமன்றங்களோடு போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். 


மேலும் படிக்க | கங்கை அமரன் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்


குன்றின் மீது நின்று கூவினாலும் ஊடகம் மூலம் சென்றால்தான் அது ஊர் சென்று சேரும்.  சமூக ஊடகங்களால் செய்திகள் குறித்த நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அச்சு ஊடகங்கள் அளவு பிற ஊடகங்களை நம்புவதில்லை என பலர் கூறுகின்றனர். நானும் அச்சு ஊடகங்களை அதிகம் நம்புகிறேன். தொலைக்காட்சி ஊடகங்களும் நம்பகத்தன்மை கொண்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR