ஓ மை கடவுளே... பத்திரிகையாளர்களை பார்த்து பதறிய மோடி

ஐரோப்பா நாடுகளுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி அங்கு பத்திரிகையாளர்களை பார்த்ததும் "Oh My God" என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 4, 2022, 05:36 PM IST
  • பத்திரிகையாளர்களை பார்த்து பதறிய மோடி
  • டென்மார்க்கில் பிரதமர் மோடி
  • பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி
ஓ மை கடவுளே... பத்திரிகையாளர்களை பார்த்து பதறிய மோடி title=

பிரதமர் நரேந்திர மோடி பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.அதன்படி கடந்த இரண்டாம் தேதி ஜெர்மனி சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் ஸ்கால்சை சந்தித்தார்.

இதனையடுத்து அவர் நேற்று டென்மார்க் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற மோடி, நார்வே, ஃபின்லாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களை சந்தித்து உரையாடினார்.

Modi

இந்நிலையில் டென்மார்க்கில் பிரதமர் மோடி செய்தியாளர்களை பார்த்ததும், “Oh My God" என்று கூறினார். தற்போது அதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் “Oh My God" என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டாகிவருகிறது. பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்துவரும் மோடி அதனை தொடராமல் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கூறிவரும் சூழலில், பிரதமர் தற்போது பத்திரிகையாளர்களை பார்த்து இப்படி சொல்லியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

மேலும் படிக்க | விரைவில் விடுதலையாகலாம் பேரறிவாளன்: உச்ச நீதிமன்றத்தின் சூசகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News