ஆன்லைனில் இலவசமாக எங்கு படம் பார்ப்பது - தீபாவளிக்கு மட்டுமல்ல எப்போதும்...!
கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாக திரைப்படம் பார்க்க பல்வேறு ஓடிடி செயலிகள் உள்ளன.
ஓடிடி தளம் மூலம் படம் பார்ப்பது என்பது தற்போது இயல்பாகிவிட்டது. தங்களுக்கு பிடித்த நாயகர்கள், இயக்குநர்களின் திரைப்படம் எந்த திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கும் காலம் போய், எந்த ஓடிடியில் ரிலீஸ் என்பது கவனிக்கும் காலம் வந்துவிட்டது.
அதற்கு ஏற்றாற்போல ஜீ 5, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமெசான் பிரைம் என பல்வேறு ஓடிடி தளங்கள், பல்வேறு கட்டணங்கள் அடிப்படையில் அவர்களின் சேவையை அளித்து வருகின்றனர். இருப்பினும், பலரும் மொபைலில் படம் பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த விரும்ப மாட்டார்கள்.
அவர்களுக்கு என்றுதான் இந்த தொகுப்பு. அதாவது, எந்தெந்த ஓடிடி தளங்களில் இலவசமாக திரைப்படங்கள், வெப்சீரிஸ், ஆவணப்படங்கள் ஆகியவற்றை காணமுடியும் என்பது இங்கு காணலாம். நீங்கள் ஒரு பைசா செலவில்லாமல் அதில் திரைப்படங்களை கண்டுகளிக்கலாம்.
MX Player
MX Player முதலில் ஒரு ஆஃப்லைன் வீடியோ பிளேயராக தான் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த செயலி தற்போது 12 மொழிகளில் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. இதில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 'குயின்' வெப்சீரிஸ், சீஸ்கேக், பாண்டூ உள்ளிட்ட பல திரைப்படங்களை நீங்கள் காணலாம்.
டுபி
கூகுள் பிளே ஸ்டார் அல்லது ஆப்பிள் ஆஃப் ஸ்டார் ஆகியவற்றில் இருந்து டுபி ஆஃப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹாலிவுட் படங்களை விரும்பவர்கள் டுபி ஓடிடியையும் விரும்புவார்கள். ஆங்கில மொழிதிரைப்படங்கள், சீரிஸ் உள்ளிடவை ஹெச்டி குவாலிட்டியில் நீங்கள் பார்க்கலாம்.
வூட்
கர்லர்ஸ் தொலைக்காட்சி, எம்டிவி உள்ளிட்டவற்றின் நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் இந்த செயலியில் பார்க்கலாம். இதில், இலவசமாகவும் பல படங்கள் உள்ளன. இருப்பினும், சில விளம்பரங்களும் ஒளிபரப்பப்படும். கட்டணம் செலுத்தியும் நீங்கள் பல தொடர்களை பார்க்கலாம்.
பிளக்ஸ்
இதை கூகுள் பிளே ஸ்டார் அல்லது ஆப்பிள் ஆஃப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கிக்கொள்ளலாம். இதிலும், இலவசமாக படங்களையும், தொடர்களையும் காணலாம். அதுமட்டுமின்றி, 200-க்கும் மேற்பட்ட சேனல்களின் நேரலையும் இதில் பார்க்கலாம்.
ஜியோ சினிமா
ஜியோ வாடிக்கையாளர்கள், ஜியோ சினிமா ஆஃப் மூலம், திரைப்படங்களையும், டிவி தொடர்களையும் பார்க்கலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களையும் அதில் காணலாம். பல டிவி சானல்களின் நேரலையையும் இதில் பார்க்க முடியும். நீங்கள் ஜியோவில் ரிசார்ஜ் செய்திருந்தால் மட்டும் போதும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ